எம்மை பற்றி


அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அல்ஹம்து லில்லாஹி நஹ்மதுஹு வநுஸல்லீ வநுஸல்லிமு அலா ரஸூலிஹில் கரீம்.

அறிமுகம்:

அகிலத்திருநாட்டில் அண்மைக்காலமாக துறைசார் ஆளுமை மிக்கவர்களையும், ஆலிம்களையும் சில தீய காற்றுகள் பலமாக தாக்கிக் கொண்டிருக்கின்றன. சமூகத்தை வழிநடாத்த தகுதியானவர்கள் சமூகத்தை விட்டும் ஓரம் கட்டப்படுகின்றனர். இந்தப்பின்னணியில் பலரின் எதிர்பார்ப்புகள், ஆவல்களுக்கு ஏற்ப சில பல ஆலோசனைகளின் பிற்பாடு நவீனம் தலைவிரித்தாடும் இவ்வுலகில் நவீனமூடாகவே துறைசார் ஆளுமைமிக்கவர்களையும், ஆலிம்களையும் சமூகத்தில் பிரகாசிக்கச் செய்யும் வேலைத்திட்டத்தின் முயற்சியின் பலனாக 20.11.2014 அன்று வியாழக்கிழமை www.lankascholars.com என்ற நாமம் தாங்கிய இவ்வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்!.

அத்துடன் அவர்களின் ஆக்கங்கள், நூல்கள் போன்றவற்றை அறிமுகம் செய்வதற்கு கட்டுரை மற்றும் நூல்கள் அறிமுகம் என்ற பகுதிகள், இன்றைய இளையத் தலைமுறையினரான மாணவச் செல்வங்கள் நாளைய அறிஞர்கள் பேனா  பிடிக்க வேண்டுமென்ற ஆர்வக் குமுறலை, உளைச்சலை எங்கே அரங்கேற்றுவது என்று ஏங்கும் இத்தருணத்தில் மாணவர்களுக்கான ஒரு பகுதி, பெண்களுக்கான பகுதி (மருத்துவ குறிப்புகள், இஸ்லாமிய பிக்ஹ் சட்ட திட்டங்கள்), சர்வதேசம், சர்வதேச அறிஞர்கள், அறபுக் கல்லூரிகள் அறிமுகம், ஆரோக்கியம், உளவியல், கவிதை உலகம், வாசகர் கருத்துப் பகுதி போன்ற மிக முக்கியமான பகுதிகளை உள்ளடக்கியதாக உங்கள் இவ்வலைத்தளம் அமையப்பெற்றுள்ளது

இலக்கு
அறிவொளி மங்கும் அகிலத்தில் துறைசார் ஆளுமை மிக்கவர்களையும், அறிவாளிகளையும் உலகிற்கு அறிமுகம் செய்து அறிவை மேலோங்கச் செய்து தூய அறிவைப் பாதுகாத்தல்.

குழு
அல்லாஹ்வின் கிருபையால் 24 மணிநேரமும் சுறுசுறுப்புடன் செயற்படக்கூடிய 09 அங்கத்தவர்களையும் (Freelancers), 03 ஆலோசகர்களையும் உள்ளடக்கியதாக அமையப்பெற்றுள்ளது.


நிர்வாகம்
வஸ்ஸலாம்.
ஜஸாகல்லாஹு ஹைரா.

………………………………………………………………………………….....
ஆசிரியர் பீடத் தொடர்புகளுக்கு


Popular Posts