Scholars

Int'l Scholars

Articles

Personality

Health

Ladies Page

Psychology

ஆலிம்கள் என்பவர்கள் யார்?

Posted by Lanka Scholars on Thursday, April 28, 2016 | 0 comments | Leave a comment...எப்போதும் எந்தவொரு இலாபத்தையும்,வெகுமதிகளையும் எதிர்பாராமல்  மற்றவர்களுக்கு வழிகாட்டியாக,பிரயோஜனம் ஈட்டித் தரக்கூடியவர்களாக இருக்க வேண்டும். எனினும் சில நேரங்களில் அதற்கு மாற்றமாக  நடக்கும் நிகழ்வுகளும் நேரங்களும் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. 

மேலும் பாமரர்கள் நிர்வாகிகளாக இருந்தால் உலமாக்களுக்கு எல்லா விதத்திலும் நோவினை செய்யக்கூடியவர்களாகத்தான் இருப்பார்கள் என்று ஆழமாக மனதில் பதிய வைத்திருப்பது ஒரு கசப்பான உண்மை. அதேபோன்றுதான் நிர்வாகிகளும் நடந்து கொள்கிறார்கள் என்பது மறுக்கவோ,மறைக்கவே முடியாத உண்மை. ஆனால் எல்லா நேரத்திலும் இந்த நிலையை ஏற்றுக்கொள்ள முடியாது. 

அப்புறம் நாம் என்ன செய்ய வேண்டும்❓❓❓❓❓
சொல்லுகிறேன் படியுங்கள்❗❗❗❗❗

உலமாக்கள் தங்களுக்கு மத்தியில் உள்ள பொறாமை (உயர்நிலையிலுள்ள,
முன்னேற்றமடைந்த, அடையக்கூடிய  உலமாக்களை பார்த்து),வேற்றுமை (ஜமாஅத் பார்த்து பழகுவது),பெருமை (மற்ற உலமாக்களை மட்டம் தட்டி கீழ் தாழ்த்தி நடந்து கொள்வது) போன்ற பண்புகளை கிள்ளிஎரிந்து, விட்டு ஒதுங்கி  தங்களுக்கு மத்தியில் பொறுமை/ஒற்றுமை/பணிவு/விட்டு கொடுக்கும் மனப்பாங்கு போன்ற பண்புகளை வளர்த்து கொள்ள வேண்டும். ஊரிலிருக்கும் யாராவது நடு நிலையாக நடக்கக் கூடிய மற்றும் தூர நோக்கில் சிந்தித்து செயல்படக்கூடிய ஒரு ஆலிமை நிர்வாகத்தில் இணைப்பதற்கு முயற்சிகளில் தாமதமின்றி ஈடுபட வேண்டும். அதேபோன்று அவருக்கு எல்லா வழிகளிலும் உதவவதோடு ஒத்துழைப்பு வழங்கக் கூடியவர்களாக மற்றவர்கள் இருக்க வேண்டும். 

பள்ளி நிர்வாகத்தில் மட்டுமின்றி ஏனைய பொறுப்புகளையும் கையில் எடுத்து வழிகாட்டியாக மாறுவதோடு 
நிர்வாகியென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், நிர்வாகம் இவ்வாறு தான் செய்ய வேண்டுமென்பதை உணர்த்தக் கூடியவர்களாக எந்த விடயங்களையும் வெளிப்படையாக மஷூரா அடிப்படையில் அள்ளாஹ்வை மாத்திரம் பயந்தவர்களாக தீர்மானம் எடுக்கக் கூடியவர்களாக மாற வேண்டும் என்பதே எனது ஆவாவும்கனவும். 

ABU SHEIKH HAMMADH

மஸ்ஜித்களும் பொதுச் சொத்துக்களும்.

Posted by Lanka Scholars on Tuesday, April 5, 2016 | 0 comments | Leave a comment...


நமது இலங்கை நாட்டைப் பொறுத்தவரை முஸ்லிம்களுக்குரிய பொதுச் சொத்துக்கள் என்பது அநேகமாக மஸ்ஜித்களுடன் இணைந்ததாகவே காணப்படுகிறது. எனவே அவற்றை பராமரிக்க வேண்டிய மற்றும் பாதுகாக்க வேண்டிய தற்காலிகமான பொறுப்புதாரிகளாக மஸ்ஜித்களின் நிருவாகிகளும், அதன் நிரந்தர பொறுப்புதாரிகளாக இலங்கையின் வக்ப் சபையும் இருக்கிறது. இலங்கையிலுள்ள மஸ்ஜித்களை நாம் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 

1. பொதுச் சொத்துக்கள் இல்லாத வருமானம் குறைந்த மஸ்ஜித்கள்
2. பொதுச் சொத்துக்கள் உள்ள வருமானம் நிறைந்த மஸ்ஜித்கள்

முதல்வகை மஸ்ஜித்கள் அல்லாஹ்வின் கிருபையால் ஓரளவுக்கு திருப்திகரமாகவே இயங்கி வருகின்றன.
இரண்டாவது வகை மஸ்ஜித்கள்தான் இன்று கவலைக்கிடமான நிலையில் இயங்கிக் கொண்டிக்கிறன. இம்மஸ்ஜித்களில் நிருவாகசபைத் தெரிவுகூட முறையாக நடத்த முடிவதில்லை.

நிருவாகிகளாக இருப்பவர்கள் தங்கள் பதவிக்காலம் முடிந்த பிறகும் பதவியை விட்டுக் கொடுக்காமை, வருடக்கணக்காக திட்டமிட்டு நிருவாக சபைக்குள் நுழைந்து கொள்ள முயற்சி செய்தல், (இதற்கு உறுதுணையாகவோ என்னவோ சமீப காலமாக வக்ப் சபை முன் வைக்கும் நிருவாகத்தெரிவு முறை. அதாவது: நிருவாகிகளாக வர விருப்பமான குழுக்களிடமிருந்து விண்ணப்பங்களை கோருதல். இந்த முறையை இவர்கள் எந்த மார்கத்திலிருந்து கற்றுக்கொண்டார்கள் என்பது தெரியவில்லை.) நிருவாகிகளாக வருவதற்காக முஸ்லிம் அல்லாத அரச அதிகாரிகாரிகளின் பரிந்துரைகளை முற்படுத்துதல், அரசியல்வாதிகள் நிருவாக சபைக்குள் நுழைந்து கொள்ள எத்தனித்தல், நிருவாகத் தெரிவின்போது அடிதடிகளும் சண்டை சச்சரவுகளும், இந்த தடைகளையெல்லாம் தாண்டி ஒரு நல்ல நிருவாகசபை தெரிவு செய்யப்பட்டு விட்டுவிட்டால் அவர்களுக்கெதிராக பழைய நிருவாகிகள் நீதிமன்றங்களில் வழக்குத் தொடருதல்.

இப்படி இன்னும் ஏராளமான பிரச்சினைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இதன் அடிப்படைக் காரணம் என்ன என்பதை நாம் சற்று நிதானமாக சிந்தித்தால் மூன்று காரணங்களை நாம் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.

1. இறைச்சமும் மார்க்க அறிவும் இல்லாமை.
2. பதவி மோகம்.
3. குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் கீழ்த்தரமான ஆசை.

இறைச்சமும் மார்க்க அறிவும் நிருவாகளுக்கும் இருக்கவேண்டும், அவர்களைத் தெரிவு செய்பவர்களுக்கும் இருக்கவேண்டும் என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

மஸ்ஜித்களின் நிருவாகிகள் “அல்லாஹ் அல்லாதவர்களைப் பயப்படுபவர்களாக இருக்கக்கூடாது” என்று அல்குர்ஆன் (9:18) வது வசனத்தில் கூறுகிறது. இந்த வசனத்தை பலர் தவறாகவே புரிந்து கொள்கிறார்கள். சண்டித்தனம் காட்டக்கூடியவர்கள் என்று நினைத்துக் கொண்டு அப்படியானவர்களை முற்படுத்த முயற்சிக்கிறார்கள். 

இந்த வசனத்தில் அல்லாஹ் இறையச்சத்தையே வலியுறுத்துகிறான். சண்டித்தனமுள்ளவர்களால் ஒரு குறுகிய காலத்துக்குள் குறுகிய வட்டத்திற்குள் மட்டுமே சாதிக்க முடியும். இறைச்சமுள்ளவர்கள் எல்லாக்காலத்திலும் எல்லா இடத்திலும் சாதிப்பார்கள், அவர்களுக்கு அல்லாஹ்வுடைய உதவியும் இருக்கிறது என்பதை பலர் புரிந்துகொள்வதே இல்லை.

நிருவாகங்களில் நடைபெறும் முறைகேடுகளுக்கும் பொதுச் சொத்துக்களை விழுங்கி ஏப்பமிடும் அதிகார வர்க்கத்தினரின் தவறுகளுக்கும் முழுமையாக அல்லாஹ்விடம் பதில் சொல்லவேண்டியவர்கள் வக்ப் சபையைச் சார்ந்தவர்களே என்பதை அவர்கள் மறந்து விட்டார்களோ என்னவோ தெரியவில்லை.

இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் சமீபகாலமாக பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துகளை வைத்துப் பார்க்கும்போது தகுதியற்றவர்களை பதவி அமர்த்தவும் மஸ்ஜித்களில் நிருவாகிகள் என்ற பெயரில் சில அரசியல்வாதிகளின் உதவியோடு அடாவடித்தனம் செய்வபவர்களுக்கு உதவவும்தான் வக்ப் சபை இருக்கிறதோ என எண்ணத்தோன்றுகிறது.

இப்படியாக தகுதியற்ற நிருவாகிகளிடத்தில் மஸ்ஜித்களும் பொதுச் சொத்துக்களும் ஒப்படைக்கப்படும்போது அவர்கள் அப்பொருட்களை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்த பாக்கியமாகவும் தமது சொந்தச் சொத்துக்களைப்போன்றுமே நினைக்கிறார்கள். சில சமயம் மஸ்ஜித்களுக்குச் சொந்தமான காணிகளையும் கடைகளையும் விற்றுவிடுகிறார்கள். சிலசமயம் தமதாக்கிக் கொள்கிறார்கள். சில சமயம் வாடகைக்குக் கொடுத்துவிட்டு வாடகையில் ஒரு பகுதியை மஸ்ஜிதுக்குக் கொடுக்கிறார்கள் இன்னொரு பகுதியை தாங்கள் சாப்பிட்டு விடுகிறார்கள்.

பொதுச் சொத்துக்களில் கையாடல் செய்பவர்களைப் பற்றி அல்லாஹ் என்ன சொல்லி இருக்கிறான் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள முயற்சிப்பதும் இல்லை. அவர்களோடு விசுவாசமாக நடந்துகொள்ளும் சில ஆலிம்களும் தங்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் இல்லாமல் போய்விடும் என்பதற்காகவோ என்னவோ அவற்றை எடுத்துக்கூற எத்தனிப்பதும் இல்லை.

அல்லாஹ் கூறுகிறான்: அபகரித்தவர் தான் அபகரித்த பொருட்களுடனேயே மறுமையில் வந்து நிற்பார்' அல்குர்ஆன் (3:162)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''உங்களில் ஒருவரை நாம் ஒரு பொறுப்புக்காக நியமித்து அவர் எம்மிடம் காட்டாமல் ஒரு தையல் ஊசியை அல்லது அதனை விட அற்பமான ஒரு பொருளை மறைத்தாலும் அது மோசடியாகும். அதனை எடுத்துக் கொண்டு மறுமைநாளில் அவர் வருவார். (ஆதாரம்: முஸ்லிம்)

இப்னு அப்பாஸ் (ரழி), தனக்கு உமர் (ரழி) அவர்கள் தெரிவித்ததாகப் பின்வரும் சம்பவத்தை அறிவிக்கின்றார்கள்: கைபர் யுத்தம் நடந்து முடிந்த பின்னர் நபி (ஸல்) அவர்களது தோழர்களிற் சிலர் அங்கு வந்தனர். மேற்படி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களைப் பற்றி 'அவர் ஷஹீத், இவர் ஷஹீத்', என்றெல்லாம் பேசிக் கொண்டார்கள். ஒரு நபரை (அவரது ஜனாஸாவைக் கடந்து சென்ற அவர்கள் 'இவரும் ஷஹீத்' என்றனர். அதுகேட்ட நபி (ஸல்) அவர்கள் ''நீங்கள் அப்படிக் கூற வேண்டாம். அவர் யுத்தத்தில் கிடைத்த கனீமத் பொருட்களில் ஒன்றான ஓர் ஆடையை அல்லது மேலங்கியைத் (திருட்டுத் தனமாக) அபகரித்துக் கொண்டார். அந்த ஆடையுடன் அவரை நான் நரகில் கண்டேன்'' என்று கூறி விட்டு,  ''உமர் இப்னு கத்தாபே! நீர் சென்று முஃமீன்களைத் தவிர வேறு எவரும் சுவர்க்கம் நுழைய மாட்டார்கள்'' என்று மக்களுக்கு மத்தியில் சொல்வீராக'' என்றார்கள் (ஆதாரம் : முஸ்லிம்)

யுத்தத்தின் போது எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட (கனீமத்) பொருட்களிலிருந்து ஓர் ஆடையைத் திருட்டுத்தனமாக அபகரித்துக் கொண்ட நபருக்கு நேர்ந்த கதி இந்த ஹதீஸில் சித்தரிக்கப்படுகிறது. பொதுச் சொத்துக்களை அபகரிப்போர், அவற்றில் கையாடல் செய்வோர், அதிகாரத்தைப் பயன்படுத்தி தம் சொந்த நலன்களை ஈட்டிக் கொள்வோர் போன்றோருக்கு இந்த ஹதீஸில் மிகுந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதைக் காணலாம்.

கைபரின் போது இறந்த இன்னுமொரு நபருடைய ஜனாஸாவுக்கான தொழுகையை நடாத்தி வைப்பதற்கு நபியவர்கள் மறுத்தார்கள். அப்போது அங்கிருந்தோர் அவர் “அல்லாஹ்வின் பாதையில் போராடிக் கொண்டே யுத்தப் பொருளைத் திருடியிருக்கின்றார்'' என்று நபியவர்கள் கூறியதாகவும் அவரது பொட்டலங்களை ஸஹாபாக்கள் ஆராய்ந்து பார்த்த போது இரண்டு திர்ஹம்கள் கூட பெறுமதியற்ற யூதர்களது ஆபரணமொன்று அங்கு கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (ஆதாரம் : அஹ்மத் : அபூதாவூத்)
இங்கும் கூட இரண்டு திர்ஹம்கள் திருடப்பட்டமைக்காக அவர் மீது தொழுகை நடாத்த நபியவர்கள் மறுத்தமை பொதுச்சொத்தில் - அது சிறியதாயினும் பெரியதாயினும் எவரும் ஆசைவைக்கலாகாது என்பதை உணர்த்துவதற்காகும்.

பொதுச் சொத்துக்களை எவ்வளவு அவதானத்துடனும் எச்சரிக்கையோடும் கையாள வேண்டும் என்பதனை உணர்த்த மேலுள்ள ஹதீஸ்கள் போதுமானவையாகும்.
எனவே அல்லாஹ்வின் சந்நிதியில் பதில் சொல்ல வேண்டும் என்ற அச்சத்தோடு சிறிய பெரிய அனைத்துப் பொறுப்புக்களையும் சொத்துக்களையும் கையாள்வது அவசியமாகும்.

அத்துடன் முஸ்லிம்களின் பொதுச் சொத்துக்களிலும் மஸ்ஜித்களின் நிருவாகத்திலும் மோசடி நடைபெறும் போது அவற்றை கடிதங்கள் மூலம் வக்ப் சபைக்கு தெரிவிக்க வேண்டிய பொறுப்பு ஊர்மக்களுக்கு இருக்கிறது என்பதையும் பொதுமக்கள் புரிந்து கொள்ளவேண்டும். நிருவாகக் காலம் காலம் முடிந்த பிறகும் பலவந்தமாக நிருவாகத்தை பிடித்துக் கொண்டிருப்பவர்கள் பற்றியும் கடிதங்கங் மூலம் வக்ப் சபைக்குத் தெரிவிக்க வேண்டும்.

அப்படி அனுப்பப்படும் கடிதங்களின் நகல்களில் ஒன்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கும் மற்றொன்று தேவைப்பட்டால் நீதியமைச்சருக்கும் அனுப்பி வைக்கப்பட வேண்டும். இம்முறைகளை கையாண்டால் இன்ஷா அல்லாஹ் எமது பொதுச் சொத்துக்களும் மஸ்ஜித்களும் பாதுகாக்கப்பட ஏதுவாக அமையும்.

அஷ்ஷேய்ஹ் இர்ஷாத் முஃமின்

ஜனாஸா தொழுகையின் போது என்ன ஓதுவது

Posted by Lanka Scholars on Tuesday, March 22, 2016 | 1 comments | Leave a comment...

ஜனாஸா தொழுகையின் போது என்ன ஓதுவது என்று நம்மில் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்....


1.முதல் தக்பீருக்குப் பின்,
... _____________________________
முதல் தக்பீர் கூறிய பின் ....
அல்ஹம்து அத்தியாயத்தை (சூரத்துல் ஃபாத்திஹா ) ஓத வேண்டும்.
ஆதாரம்:- புகாரி, 1335
2.இரண்டாம் தக்பீருக்கு பின்,
_______________________________
இரண்டாம் தக்பீர் கூறிய பின் ......
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூற வேண்டும்
”அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத் அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்.
ஆதார நூல்:- பைஹகி ,4/39
3,4 .மூன்றாவது மற்றும் நான்காவது தக்பீருக்கு பின்....
_________________________________
இறந்தவரின் பாவமன்னிப்புக்காகவும், மறுமை நன்மைக்காகவும் துஆச் செய்ய வேண்டும். ஜனாஸா தொழுகையின் போது நபி(ஸல்) அவர்கள் பல்வேறு துஆக்களை கேட்டுள்ளார்கள். அவற்றில் இயன்றதை நாம் ஓதிக் கொள்ளலாம்.
அல்லாஹும்மஃபிர் லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஃபு அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத் அப்யளு மினத் தனஸ் வஅப்தில்ஹு தாரன் ஃகைரன் மின் தாரிஹி வஅஹ்லன் ஃகைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் ஃகைரன் மின் ஸவ்ஜிஹி வஅத்கில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபில் கப்ர் வமின் அதாபின்னார்
அறிவிப்பவர்:- அவ்ஃப் பின் மாலிக்(ரலி)
முஸ்லிம்: 1601
பொருள்: இறைவா..!
இவரை மன்னித்து அருள் புரிவாயாக..!
இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக..!
இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக..!
இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக..!
பனிகட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக..!
அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்துவதைப் போல், இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக..!
கப்ரின் வேதனையை விட்டும், நரகத்தின் வேதனையை விட்டும் இவரை பாதுகாத்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
இதை மற்றவர்களும் பயன் பெற உதவுங்கள். அதிகம் அதிகம் SHARE செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்! அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்கும் உதவி செய்வானாக. ஆமீண்!
॥॥॥ஜஷாக்கல்லாஹ் ஹைர் ॥॥॥

பாணந்துறை ஜாமிஆ இப்னு உமர் பழைய மாணவர்களுக்கான கல்வி மற்றும் வழிகாட்டலுக்கான ஒன்று கூடல்.

Posted by Lanka Scholars on Monday, March 21, 2016 | 0 comments | Leave a comment...

கட்டாரில் இவ்வார இறுதியில் விஷேட சன்மார்க்க சொற்பொழிவுகள்

Posted by Lanka Scholars on | 0 comments | Leave a comment...டோஹா ,கட்டார் :
கட்டார் வாழ் இலங்கை இந்திய சகோதர சகோதரிகளுக்காகதமிழ் தஃவா களத்தில் பிரபல இஸ்லாமிய அழைப்பாளர் அஷ்ஷெய்க்.முர்ஷித் அப்பாஸி கலந்து சிறப்பிற்கும் இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சிகள் எதிர்வரும் 24 ,25,26 ம் திகதிகளில்  இலங்கை தஃவா நிலையம் (SLDC)  ஏற்பாடு செய்துள்ளது .
இன்ஷா அல்லாஹ் முறையே எதிர்வரும் :

வியாழன் 24/3/2016 அன்று மாலை 8:45 மணியிருந்து 10:00 வரை குடும்ப சகிதம் கலந்து பயன்பெறும் வகையில் எயர்போர்ட் ஏரியாவில் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அசீஸ் கஷ்ஷாபி பள்ளிவாயலில் "அல்லாஹ்வின் அருளைப் பெற்ற குடும்பம்" என்ற தபைப்பிலும்

வெள்ளி ஜும்மாத் தொழுகையைத் தொடர்ந்து பனார் 4ம் மாடியில் அமைந்துள்ள 3ம் வகுப்பறையில் "இஸ்லாத்திற்காக நாம் செய்தவை எவை " என்ற தலைப்பிலும்

சனிக்கிழமை பெண்கள் மாத்திரம் கலந்து பயன்பெறும் ஒரு நிகழ்ச்சி "முன்மாதிரி முஸ்லிம் பெண்கள்" என்ற தலைப்பிலும் உரைகள் நிகழ்த்தபடும் .

கட்டார் வாழ் உறவுகள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

தகவல்
Media Unit
SLDC Qatar

ஜாமிஆஹ் நலீமிய்யா கலாபீடம் புதிய மாணவர்கள் அணுமதி 2016

Posted by Lanka Scholars on | 0 comments | Leave a comment...


குகைக்குள் மறைந்திருக்கும் அற்புத தகவல்கள்

Posted by Lanka Scholars on | 0 comments | Leave a comment...

ங்கள் எப்போதாவது மலைக் குகைகளில் தங்கி இருக்கிறீர்களா? அதுவும் ஓர் இரவுப் பொழுதில்! ஒருவிதமான பயமும் உங்களுடன் சேர்ந்து தங்கியிருக்கும். அப்போதுதான் குகையின் பூர்வீக வரலாறுகள் அந்த மலையைப் பற்றியோ, அந்த குகையைப் பற்றியோ அந்த வட்டாரங்களில் தகவல்களாகக் கேள்விபட்டிருப்பீர்கள். இப்படி ஒவ்வொரு மலைக்குகைக்கும் ஒவ்வொரு விதமான வரலாற்றுப் பின்னணிகள் உண்டு. அதைப்போல குர்ஆனில் சில குகைகளைப் பற்றிய தகவல்களை அல்லாஹ்வும் பதிவு செய்கிறான், அதுவும் சற்று சுவாரஸ்யமாக!1. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜபல் நூர் மலையிலிருக்கும் ஹிரா குகையினுள் சென்று தவமிருந்தார்கள். அவர்களுக்கு நாற்பது வயதானபோது அக்குகைக்கு ஒரு மலக்கு வந்து "ஓதுக" என்று கூறினார். "எனக்கு ஓதத்தெரியாது" என மும்முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பகர, வந்த மலக்கு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மூன்று முறை கட்டித்தழுவி ஆலிங்கனம் செய்து, "முஹம்மதே! நீர் அல்லாஹ்வின் தூதர். நான் ஜிப்ரயீல்..." என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் அம்மலக்கு. இந்ந்கழ்ச்சி ஒரு திங்கட் கிழமை மிக அதிகாலைப் பொழுதில் நடந்தது.

வானவர் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மூலமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருளப்பட்ட குர்ஆன் வேதத்தின் முதல் ஐந்து வசனங்களைச் சொல்லிக் கொடுக்கப்பட்டது.

(நபியே!) அனைத்தையும் படைத்த உங்களது இறைவனின் திருப்பெயரால் (எனது கட்டளைகள் அடங்கிய திருக்குர்ஆனை) நீங்கள் ஓதுவீராக! அவனே மனிதனை கருவிலிருந்து படைத்தான். (நபியே பின்னும்) நீங்கள் ஓதுங்கள்! உங்களது இறைவன் மாபெரும் கொடையாளி! அவன் தான் எழுதுகோலைக் கொண்டு எழுதக் கற்றுக் கொடுத்தான். அதன் மூலம் மனிதன் அறியாதவைகளையெல்லாம் அவனுக்குக் கற்றுக் கொடுக்கிறான். (அல்குர்ஆன் 96: 1-5)

பூலோகத்தில் பாக்கியமான குர்ஆன் முதலில் இறங்கியது ஒரு குகையில் தான் என்று எண்ணும்போது வியப்பாக இருக்கிறதல்லவா? இந்த புனித குகை வாசலில் இன்றும் "இக்ரஃ பிஸ்மிக்க" என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. இக்குகையிலிருந்து வெளியே பார்த்தால் தொலைவிலுள்ள கஃபத்துல்லாஹ் தெளிவாகத் தெரிகிறது.


2. எகிப்து நாட்டில், "ஸீனாய்" என்ற பிரதேசத்திலுள்ள ஒரு மலைக்குப் பெயர் "தூர்". எனவே அம்மலைக்கு "தூர் ஸீனாய்" மலை என்று பெயர். ஃபிர்அவ்னின் கொடுமையிலிருந்து தங்களை மீட்ட நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் மீது, இஸ்ரவேலர்கள் நம்பிக்கையும், விசுவாசமும் கொண்ட அவர்கள் ''அல்லாஹ்வின் சட்டதிட்டங்களைத் தாருங்கள் நாங்கள் அதன்படி செயல்படுகிறோம்" என்று கூறினார்கள். இது பற்றி நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனிடம் வேதம் பற்றிக் கேட்க, இறைவன் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தூர்ஸீனாய் மலையிலுள்ள ஒரு குகையில் 30 நாட்கள் தொடர்ச்சியாக இரவும் பகலும் நோன்பு நோற்கக் கட்டளையிட்டான்.

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் 30 நாட்கள் தொடர் நோன்பு வைத்தார்கள். ஆயினும் வாயில் நாற்றமிருப்பதால் இறைவனிடம் பேசுவது ஒழுக்கமான செயலாக இருக்காது என கருதி 30 ஆவது நாளில் பகலில் மிஸ்வாக்கு செய்தார்கள். இக்குற்றத்திற்காக இன்னும் 10 நாட்கள் அதிகமாக நோன்பு நோற்க இறைவன் கட்டளையிட்டான். (இது குறித்த விபரங்கள் குர்ஆனின் 7:142 ஆவது வசனத்தில் இடம்பெற்றுள்ளன),

பின்பு "தவ்ராத்" என்னும் வேதத்தைக் கொடுத்தான்.

அல்லாஹ் தூர்ஸீனாய் மலையைப் பற்றி தனியாக (தூர் - மலை) என்கிற ஒரு அத்தியாயத்தையே குர்ஆனில் இடம்பெறச் செய்து, அதன் முதல் வசனத்தில், மலையின் மீதும், தவ்ராத் வேதத்தின் மீதும் சத்தியம் செய்தவாறு,

"வஹி அருளப்பெற்ற மலையின் மீது சத்தியமாக; விரித்த கடிதத்தில் வரி வரியாக எழுதப்பட்ட வேத நூலின் மீது சத்தியமாக" (அல்குர்ஆன் 52: 1-3) என்று இறைமறையில் குறிப்பிட்டுள்ளான்.

ஆக, தவ்ராத் வேதமும் ஒரு மலையின் குகையில் வைத்துத்தான் அருளப்பட்டது.


3. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அன்புத் தோழர் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் மக்காவை விட்டு மதீனாவிற்கு "ஹிஜ்ரத்" செய்யும்போது, வழியில் "தெளர்" என்னும் குகையில் தங்க நேரிட்டது. மக்கத்து குரைஷிகள் தப்பித்த இருவரின் தலைக்கும் பெரும் தொகை பரிசாகத் தருவதாக அறிவித்தார்கள். எதிரிகள் மக்காவெங்கும் தேடினார்கள். மக்காவிலிருந்து புறவழிச் செல்லும் எல்லா பாதைகளிலும் தேடினார்கள்.

தேடும் கூட்டம் ஒன்று "தெளர்" குகையின் வாசலின் அருகே கையில் வாளோடும், ஈட்டியோடும் வந்தது. தோழர் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு திடுக்கிட்டு "யா ரஸூலல்லாஹ்! நாம் இருவர்தானே இக்குகையில் உள்ளோம்" என்றதும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "இறைவனும் நம்மோடு இருக்கிறான்" என்று கூறியதை குர்ஆனில் அல்லாஹ்,

"நிராகரிப்போர் அவரை ஊரைவிட்டு வெளியேற்றிய சமயத்தில் நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான். "தெளர்" என்னும் மலைக் குகையில் இருந்த இருவரில் ஒருவராக அவர் இருந்தபோது விரோதிகள் வந்து சூழ்ந்து கொண்ட சமயத்தில் தன்னுடன் குகையில் இருந்த தோழரை நோக்கி, ''நீர் கவலைப்படாதீர், நிச்சமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்" ( “லா தஹ்ஸ(z)ன் இன்னல்லாஹ மஅனா" ) என்று ஆறுதல் கூறினார்கள். (அல்குர்ஆன் 9:40)

ஒரு கணப்பொழுதிலும் இறைவனை மறக்காத நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய இவ்வாசகம் தான் "மெஞ்ஞானத்தின் மிகப்பெரிய சித்தாந்தமான ஏகத்துவத்தோடு தொடர்ப்படுத்தி மரித்துப்போன இதயத்தையெல்லாம் உயிர் கொடுத்த உயர்ந்த சொல். அதனை இந்த "தெளர்" என்கிற புனித குகையில் வைத்துத்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருவுளமானார்கள்.

( இங்கு ஒரு சிறு குறிப்பை பகிர்ந்து கொள்ள விழைகிறேன். இராக்கின் முன்னால் அதிபர் ஸத்தாம் ஹுஸைனின் மாளிகையோ அல்லது அலுவலகமோ என்று தெரியவில்லை. அதன் நிலை வாசலுக்கு மேல் மிகப்பெரிய அளவில் இவ்வாத்தை, அதாவது “லா தஹ்ஸ(z)ன் இன்னல்லாஹ மஅனா" எனும் அவ்வார்த்தை அழகாகப் பொறிக்கப்பட்டிருந்ததை பத்திரிகை புகைப்படமொன்றில் கண்ணுற்றபோது மிகவும் ஆச்சரியமாகக்கூட இருந்தது. அதனால்தான் என்னவோ 30 க்கும் மேற்பட்ட நாடுகள் அந்நாட்டைத் தாக்கியபோதும் அவர் சிறிதும் அஞ்சாமல், இன்னும் சொல்லப்போனால் உயிருக்குக்கூட அஞ்சாமல் இருந்த காரணத்தினால் தான் அவரது இறுதி மூச்சை அல்லாஹ் தனது திருக்கலிமாவை மொழியச்செய்து அதனை ஒட்டுமொத்த உலகமும் பார்க்கும்படி செய்தான் என்று எண்ணத் தோன்றுகிறது. )


4. உஹது யுத்தத்தின் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முபாரக்கான பல் ஷஹீதாக்கப்பட்டது. அச்சமயம் ஸஹாபாக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை உஹது மலையிலுள்ள ஒரு குகையில் அமரச் செய்தனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமகளார் அன்னை ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முதலுதவி செய்யப்பட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஆசுவாசப்படுத்தி இளைப்பாறியது அந்த உஹது மலையிலுள்ள குகையில்தான். இன்றும் அந்த குகையிலிருந்து கஸ்தூரிமணம் கமழ்ந்து கொண்டே இருக்கிறது!

5. திருக்குர்ஆனில் "குகை" என்ற என்ற தலைப்பிலேயே ஒரு அத்தியாயத்தை "ஸூரத்துல் கஹ்ஃப்" ஐ இறக்கியுள்ளான் இறைவன். இந்த 18 ஆவது அத்தியாயத்தில் வியப்புக்குறியதொரு வரலாறு விவரிக்கப்படுகிறது.

அமைதியாக இறைவனை வணங்க விரும்பிய சில வாலிபர்கள் ஒரு மலைக்குகையைத் தங்களின் பாதுகாப்பான இடமாகத் தேர்ந்தெடுத்து இறைவணக்கத்திற்குச் சென்றனர். ஆஸியா மைனரின் மேற்குக் கரையிலுள்ள ஸ்மிர்னாவுக்கு 50 மைல் தெற்கேயுள்ள எஃபெஸஸ் நகரத்தில் 7 வாலிபர்கள் இறைவழிபாட்டில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அப்பகுதியை ஆண்டுவந்த அரசன் சிலை வணக்கம் புரிபவனாக இருந்ததால், அவ்வாலிபர்களின் ஏக இறைவழிபாட்டுக்கு இடையூறுகள் பல விளைவித்து அவர்களை துன்புறுத்தினான். அரசனின் தொல்லையிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ளும் பொருட்டு அவ்வாலிபர்கள், அருகிலுள்ள மலைக் குகையொன்றைத் தேர்ந்தெடுத்து அங்கு சென்று இறைவழிபாட்டில் மூழ்கினார்கள். அந்தக் குகையின் அமைப்பை அல்குர்ஆன் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது;

"சூரியன் உதிக்கும்போது குகையின் வலப்பக்கத்தில் அது சாய்வதையும், அது அஸ்தமிக்கும்போது இடப்பக்கத்தையும் அது கடந்து செல்வதையும் நீர் காண்பீர்." (அல்குர்ஆன் 18:17)

இறைவழிபாட்டில் மூழ்கிய இவர்கள் சிறிது நேரத்தில் அப்படியே அயர்ந்த உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்கள். உறக்கம் தெளிந்து விழித்தபோது, பசித்தது. சிறிது நேரம்தான் உறங்கியிருப்போம் என்று கருதி தங்களில் ஒருவரிடம் பணம் கொடுத்து ஊருக்குள் சென்று உணவு வாங்கி வருமாறு அனுப்பினார்கள். அவர் கொண்டு சென்ற வெள்ளிக்காசுகளை உணவுக்கடைக்காரர்கள் செல்லாதவையென்று வாங்க மறுத்துவிட்டனர்.

இறுதியில் அவர் அரசனிடம் முறையிட்டார். அந்த வெள்ளிக்காசுகளை வாங்கிப்பார்த்த அரசன் அவை 300 ஆண்டுகளுக்கு முந்திய பழைய நாணயங்களாக இருப்பதைக்கண்டு அதிசயித்து விசாரித்தான். அந்த அரசனின் பெயர் இரண்டாவது தியோஷியஸ்.

உணவு வாங்க வந்த வாலிபரின் வாயிலாக குகைத் தோழர்களைப்பற்றி அறிந்த அரசன் அவரையும் அழைத்துக் கொண்டு குகைக்குச் சென்றான். அப்போது தான் உணவு வாங்க வந்த வாலிபருக்கு, தாங்கள் 300 ஆண்டுகள் உறங்கிவிட்ட உண்மை புலப்பட்டது.

குகைக்குச் சென்ற அரசன் அந்தக் குகையில் சில வாலிபர்களும், அவர்களுக்குத் துணையாகச் சென்ற ஒரு நாயும் உறங்கிக் கொண்டு இருக்கக் கண்டான். அரசனுடன் வந்த வாலிபரும் குகைக்குள் சென்று மீண்டும் தம் தோழர்களுடன் தூகத்தில் ஆழ்ந்துவிட்டார். குகையின் வாயிலும் அடைக்கப்பட்டுவிட்டது.

அரசனும் அவனுடன் வந்தவர்களும் தாங்கள் கண்கூடாகக் கண்ட  இந்த அற்புதக் காட்சியைப் பற்றி அந்த மலைக்குகை வாசலில் கல்லில் விரிவாகச் செதுக்கி வைத்துவிட்டுத் திரும்பினர்.

"குகைத் தோழர்களும் (அந்த மலையில் உள்ள குகை வாசலில் பொறிக்கப்பட்டிருக்கும்) கல்வெட்டும் நம்முடைய அத்தாட்சிகளில் அதிசயமானதென்று நீர் எண்ணுகிறீரா...?" (அல்குர்ஆன் 18:9)

6. குர்ஆனில் தெரிவிக்கப்படும் மற்றுமோர் சான்று "குகை இல்லங்கள்" ஆகும்.

அரேபியாவின் வடமேற்குப் பகுதியில் மதீனாவுக்கும் ஸிரியாவுக்கும் நடுவே "ஹிஜ்ர்" என்ற மலை நாட்டை தலைநகராகக் கொண்டு வாழ்ந்தனர் ஸமூது மக்கள். செல்வச் செழிப்புடன் வாழ்ந்த இந்த சமூகத்தினர், சிற்பக்கலையில் சிறந்து விளங்கினர். மாட மாளிகைகளை எழுப்பினாலும் மலைப்பாறைகளைக் குடைந்து குகை இல்லங்களை அமைத்து அதில் வாழவே விரும்பினர்.

இச்சமூகத்தினருக்கு நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அனுப்பி சத்திய நெறியினை சொல்லிட அல்லாஹ் நாடினான். ஸமூது மக்கள் நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும், அவர்களின் ஆதரவாளர்களையும் அடியோடு ஒழித்திடச் சதித் திட்டம் தீட்டினர். மேலும், தங்களை யாராலும் எவ்வித இயற்கை சக்தியாலும் அழிக்க முடியாது என்ற இறுமாப்பில், மலைகளைக் குடைந்து பாதுகாப்பான குகைகளை அமைத்து வாழ்ந்ததையும், அவ்வாறிருந்தும் இறை தண்டனைய்லிருந்து தப்ப முடியாமல் அழிந்ததையும் அல்குர்ஆன் வர்ணிக்கிறது

"அச்சமயம் வாழலாம் எனக்கருதி அவர்கள் மலைகளைக் குடைந்து வீடுகள் அமைத்தார்கள். அவர்களை விடியற்காலையில் பெரும் சப்தம் பிடித்துக் கொண்டது. அவர்கள் தங்களை ரட்சித்துக் கொள்ளச் செய்திருந்தவைகளில் ஒன்றுமே அவர்களுக்குப் பயனளிக்கவில்லை." (அல்குர்ஆன் 15: 82-84)

ஒரு பெரிய சமுதாயமே மலைகளில் குகைகளை அமைத்தும், கட்டிடக் கலையில் முன்மாதிரியாகவும் திகழ்ந்ததையும் ஆராய்ந்த கிரேக்க சரித்திர ஆசிரியர்களான தாஸ்டட்வர்ஸ், இஸ்ட்ராயூ போன்றவர்கள் புகழ்ந்து எழுதியுள்ளார்கள்.

- சிந்தனை சரம்  ஜூன் 2010

இடது கை பழக்கமுள்ளவர்களை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்

Posted by Lanka Scholars on | 0 comments | Leave a comment...

பொதுவாகவே நண்பர்கள் மத்தியில் கூட இடது கை பழக்கம் உள்ளவர்களை காண்பது மிகவும் அரிது தான். அதையும் தாண்டி அப்படிப்பட்ட ஓர் நபர் நமது நண்பர் அல்லது உடன் பணிபுரியும் நபராக இருந்தால், அவர் கண்டிப்பாக தனித்தன்மையுடன் காணப்படுவார். மேலும் அவர் அனைத்து வகையிலும் சிறந்து செயல்படும் நபராக காணப்படுவார். உண்மையிலேயே இடது கை பழக்கம் உள்ளவர்கள் உலகளவில் சிறந்து காணப்படுகிறார்கள்.கலை, அறிவு, செயல்பாடு, மல்டி டாஸ்கிங், கோபம் என அனைத்தும் இவர்களுக்கு அதிகமாக வருகிறது.

சிறந்த கலைஞர்கள்
இடது கை பழக்கமுள்ளவர்கள் சிறந்த கலைஞர்களாக திகழ்கிறார்கள். கலை, இசை, நடிப்பு என எந்த படைப்பாற்றல் துறையாக இருப்பினும் இவர்கள் அதில் சிறந்து விளங்குகிறார்கள். மெக்கின்டோஷ் வடிவமைப்பாளர்களில் ஐந்தில் நால்வர் இடது கை பழக்கமுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபலமானவர்கள் 
வலது கை பழக்கமுள்ளவர்களோடு ஒப்பிடுகையில் சராசரி சதவீதத்தில் இடது கை பழக்கமுள்ளவர்கள் தான் அதிகம் பிரபலமாக இருக்கிறார்கள். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பெஞ்சமின் பிராங்க்ளின்,பில் கேட்ஸ், லியோனார்டோ டாவின்சி என இந்த பட்டியல் நீள்கிறது.
மல்டி டாஸ்கிங் 
இடது கை பழக்கமுள்ளவர்களது மூளை சிறந்து செயல்படுகிறதாம். இதனால் இவர்கள் மல்டி டாஸ்கிங்கிலும் சிறந்து காணப்படுகிறார்கள்.
சமநிலை 
உடலளவிலும் கூட சமநிலையை கட்டிப்பாட்டில் வைத்திருப்பதில் இவர்கள் மேலோங்கிக் காணப்படுகிறார்கள். வலது கை பழக்கமுள்ளவர்களால் இடது கையில் வேலை செய்வது கடினம், ஆனால், இடது பழக்கம் உள்ளவர்கள் எளிதாக வலது கையிலும் வேலை செய்வார்கள்.
வாழ்நாள் 
வலது கை பழக்கம் உள்ளவர்களை விட இடது கை பழக்கம் உள்ளவர்கள் சராசரியாக 9 வருடங்கள் குறைவாக தான் உயிர் வாழ்கிறார்கள்.

கோபம் 
இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு விரைவாக கோபம் வந்துவிடும். இவர்களது மூளை வேகமாக செயல்படுவது தான் இதற்கான காரணம் என கூறப்படுகிறது.
பார்வை
தண்ணீருக்கு கீழேயும் கூட நல்ல பார்வை திறன் இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு இருக்கிறது.
வயது வருவது
வலது கை பழக்கம் உள்ளவர்களோடு ஒப்பிடுகையில் சராசரியாக 4-5 மாதங்களுக்கு முன்னரே இடது கை பழக்கம் உள்ளவர்கள் வயது வந்துவிடுகிறார்கள்.
ஐ. க்யூ 
அறிவியல் ரீதியாகவே இடது கை பழக்கம் உள்ளவர்கள் புத்திசாலிகள் என்று கண்டறியப்பட்டுள்ளது. நியூயார்க்கில் உள்ள செயின்ட். லாரன்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இது கண்டறியப்பட்டது. ஐ. க்யூ அளவு 140க்கு மேல் உள்ளவர்களில் அதிகமானவர்கள் இடது கை பழக்கம் உள்ளவர்கள் தான். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஐசக் நியூட்டன், சார்ல்ஸ் டார்வின், மற்றும் பெஞ்சமின் பிராங்க்ளின் போன்ற அனைவரும் இடது கை பழக்கம் உள்ளவர்கள் தான்.
ஆகஸ்ட் 13 
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 13ஆம் நாள் உலக இடது கை பழக்கம் உள்ளவர்கள் நாளாக கொண்டாடப்படுகிறது.

"ஹிஜாமா" -இரத்தம் குத்தி எடுக்கும் சுன்னத்தான வைத்திய முறை.

Posted by Lanka Scholars on Wednesday, March 16, 2016 | 0 comments | Leave a comment...

ஹிஜாமா ( حجامة ) என்றால் என்ன?ஹிஜாமா ('Hijama' Arabic: حجامة lit. "sucking") என்ற அரபி வார்த்தை hajm '(உறுஞ்சுதல்-Sucking) இருந்து பெறப்படுகிறது. கப் அல்லது கோப்பையில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி, பின்னர் நமது தோல் மேற்பரப்பில் வைத்து தூய்மையற்ற அல்லது கெட்ட இரத்த கழிவுகளை உடலின் பல்வேறு இடங்களில் இருந்து வெளியேற்றும் மருத்துவ முறை தான் ஹிஜாமா (Hijama).நபி ( ஸல்) அவர்கள் இதைப்பற்றி என்ன கூறியுள்ளார்கள்?இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'அல்லாஹ் எந் நோயையும் அதற்குரிய நிவாரணியைஅருளாமல் இறக்குவதில்லை.என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ( புஹாரி - 5678 )

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்நபி(ஸல்) அவர்கள் 'மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. தேன் அருந்துவது, இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில் கீறுவது, தீயால் சூடிட்டிக்கொள்வது ஆகியனவே அந்த மூன்றுமாகும். (ஆனால்,) தீயால் சூடிட்டுக் கொள்ள வேண்டாமென என் சமுதாயத்தாருக்கு நான் தடை விதித்கிறேன்' என்று கூறினார்கள்.மற்றோர் அறிவிப்பில், 'தேனிலும் இரத்தம் வெளியேற்றுவதிலும் நிவாரணம் உள்ளது' என வந்துள்ளது (புஹாரி - 5680)

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் குருதி உறிஞ்சி எடுத்தார்கள். (புஹாரி - 5694 )

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்நபி(ஸல்) அவர்கள் 'இஹ்ராம்' கட்டியிருந்த நிலையில் குருதி உறிஞ்சி எடுத்துக்கொண்டார்கள். (புஹாரி - 5695 )

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் தலையில் குருதி உறிஞ்சி எடுத்தார்கள். (புஹாரி - 5699 )

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களுடைய மிஃராஜ் பயணத்தின் போது மலக்குமார்களின் கூட்டங்களை கடக்கும் போது"ஒ முஹம்மத், ஹிஜாமா செய்யுங்கள்" என்று சொல்லப்படாமல் தவிர கடக்கவில்லை. (நூல்: திர்மிதி)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், யாரெல்லாம் பிறை 17, 19, 21 ஆகிய தினங்களில் ஹிஜாமா செய்கிறார்களோ, அது எல்லா நோய்க்கும் நிவாரணம் ஆகும். (நூல்: ஸஹீஹ் ஸுனன், அபூ தாவூத்)

ஹிஜாமா ( حجامة ) செய்தால் எற்ப்படும் பயன்கள்: முதன்மையான பயனும், நன்மை என்னவென்றால் இது நபி (ஸலஃ)யின் வழிமுறை ( சுன்னத்), அதற்கான நன்மைகள் இவ்வுலகத்திலும், மறுமை நாளிலும் கிடைக்கும். இந்த ஹிஜாமா ( குருதி (அ) இரத்த உறுஞ்சுதல்மூலம் இரத்த ஓட்டத்தை சமசீர் செய்து Kinetic energy என்ற ஆற்றலை அதிகப்படுத்துகிறது.  இது இரத்தத்தில் இருந்து நச்சுகள் மற்றும் பிற கழிவு பொருள் அகற்றுகிறது. இதனால் சில வகையான நோய்கள் துரிதமாக குணமடைய உதவுகிறது.

ஹிஜாமா‬ (حجامة ) செய்வதின் மூலம் சில வகையான நோய்கள் உதாரணமாக இரத்தம் சார்ந்த Metabolic disease வருவதை நாம் முன் எச்சரிக்கையாக தடுக்கலாம். அதாவது வரும் முன் காப்போம் ( Prevention better than cure). ஹிஜாமா செய்வதால் சில தீய கெட்ட எண்ணங்களால் உருவாகும் கண்ணோறு, செய்வினை போன்ற நோய்களின் பாதிப்பதை குறைக்கலாம் என கூறப்படுகிறது.

ஹிஜாமா முறையில் எந்தவித பக்க விளைவுகள் இல்லை, இது சுமார் 70% நோய்களையும், உடலின் குறைபாடுகளை குணமாக்க உதவுகிறது. இதை நாம் நவீன மருத்துவத்துடன் செய்தால் நம் உடல் நோய் மிகவேகமாக குணமடையும்.  நாம் உடல்நிலை சரியில்லாமல் நோய்வாய்ப்பட்டு இருக்கும் சமயத்திலும், நாம் உட்கொள்ளும் மருந்திலிருந்தும், அதிகநச்சுப்பொருட்கள் (Toxins), கழிவுப்பொருட்கள் ( Waste metabolic product) உடலிருந்து வெளியோற வழி இல்லாமல் நம் இரத்தத்திலும், தோல் அடிப்புறம் ( Subcutaneous area) களிலும் சேகரமாகியுள்ளது. அவற்றை நாம் ஹிஜாமா மூலம் அப்புறப்படுத்தி நம் உடல் நோய்களை குணப்படுத்த துரிதப்படுத்தலாம்.

ஒவ்வோரு வருடத்திற்கு இரண்டு மற்றும் நான்கு முறை ஹிஜாமா சிகிச்சை செய்வதனால் இடைப்பட்ட காலம் காலங்களில் எற்ப்பட்ட, உடலில் சேகரமாகிய கழிவுகளை நீக்கி, இரத்ததை சுத்தப்படுத்தி, இரத்த சுழற்சி மேம்படுத்தலாம், புதிய ஹார்மோன்கள் உற்பத்தியை துண்டுவதின் மூலமும், உடலின் அமைப்புகள் இயற்கை சமநிலை ( Natural Biological Balance) மேம்படுத்துவதன் மூலம்பல உடல் சார்ந்த நோய்களை தடுக்கலாம்.இரத்த மற்றும் நிணநீர் (Lymph) தேங்கி கழிவுகளை அகற்ற உதவுகிறது. இம்முறையால் நல்ல இரத்தங்கள், இரத்த செல்கள் (Blood cells - RBC, WBC ), இரத்தப்புரதங்கள் ( Blood Protein) இவைகள் வெளியேறுவதில்லை.எந்த காலங்களில் ( நாட்களில் ) ஹிஜாமா( حجامة ) செய்யலாம்?இந்த ஹிஜாமா இஸ்லாமிய காலண்டரான சந்திர காலண்டர் படி 'ஒற்றைப்படை' நாட்களில் செய்து சிறந்ததாக பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், குறிப்பாக திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் நாட்களில் செய்து சிறந்தது. 

நபி (ஸல்) அவர்கள் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு தினங்களில் ஹிஜாமா செய்வதை தவீர்த்துள்ளார்கள். மேலும் புதன்கிழமைகளில் Hijama செய்வதை தடுத்துள்ளார்.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், யாரெல்லாம் பிறை 17, 19, 21 ஆகிய தினங்களில் ஹிஜாமா செய்கிறார்களோ, அது எல்லா நோய்க்கும் நிவாரணம் ஆகும். (நூல்: ஸஹீஹ் ஸுனன், அபூ தாவூத்)

இப்னு உமர் (ரலி) கூறிய அறிவிப்பு இப்னு மாஜா (3487) பதிந்துள்ளது அதன் கருத்தாவது, நபி (ஸல்) அவர்கள் வெறும் வயிற்றில் ஹிஜாமாசெய்வது குணப்படுத்தக்கூடியது என்றும், இறை அருள் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்கள். மேலும் அது அறிவாற்றல் மற்றும் நினைவாற்றல் அதிகரிக்கிறது. எனவே வியாழக்கிழமை அன்று அல்லாஹ்வின் அருள் மீது ஆதரவு வைத்து ஹிஜாமா செய்யுங்கள். புதன், வெள்ளி தினங்களில் ஹிஜாமா செய்யாதீர்கள். சனி மற்றும் ஞாயிறு தினங்களில் செய்வதை தவீர்பதின் மூலம் பாதுகாப்பாக இருங்கள். திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஹிஜாமா செய்யுங்கள்.இந்த நாட்களில் தான் நபி ஐயூப் (அலை) நோய் இருந்து பாதுகாப்பு பெற்றார்கள்.

காலநிதி ஹஸன் அல் துராபி என்ற சிந்தனையாளர் – ஓர் அறிமுகம்‏

Posted by Lanka Scholars on Monday, March 14, 2016 | 0 comments | Leave a comment...


சென்ற 5ம் திகதி சூடானை சேர்ந்த இஸ்லாமிய சிந்தனையாளர் ஹஸன் துராபி காலமானார். அப்போது அவருக்கு வயது 84.
ஹஸன் துராபி 1932 பெப்ரவரி 01ம் திகதி பிறந்தார். அவரது தந்தை ஒரு நீதிபதியாகவும் ஒரு தரீக்காவின் ஷெய்க் ஆகவும் இருந்தார்.
சிறு வயதிலேயே  அல்குர்ஆனை மனனமிட்ட அவர் பல கிராஅத்களையும் பயின்றிருந்தார். சட்டத்துறையில் முதலில் கல்வியை சூடானில் பெற்ற அவர்  ஒக்ஸ்போட்  பல்கலைக் கழகத்தில் அத்துறையில் MA முடித்தார். பின் பிரான்ஸின் ஸோபோர்ன்  பல்கலைக் கழகத்தில் கலாநிதிப் பட்ட படிப்பையும் முடித்தார்.
அரபு மொழியை தாய் மொழியாக கொண்ட அவர் ஆங்கிலம், பிரான்ஸ், ஜெர்மனி மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார்.
மிகவும் ஆரம்ப காலத்தில் அல் இஃவான் அல் முஸ்லிமூன் இயக்கத்தில் சேர்ந்து பாடுபட்ட அவர் 1969இல் அதிலிருந்து பிரிந்து மிகப் பாரியதொரு அரசியற் போராட்டத்தைக் கொண்டு சென்றார்.
கீழ் வருவன அவரது சில முக்கிய நூல்களாகும்.
மார்கத்தை புணரமைத்தல் – تجديد الدين
சட்டவாக்க முறைமை -  منهجية التشريع
மார்க்கத்தின் போதனைகளுக்கும் சமூகத்தின் சம்பிரதாயங்களுக்குமிடையே பெண் – المرأة بين تقاليد المجتمع وتعاليم الدين
இஸ்லாமிய இயக்கத்திற்கான சுயவிமர்சனத்தின் அவசியம் – ضرورة النقد الذاتي للحركة الإسلامية
மார்க்க வணக்கங்களும், தொழுகையும் – الشعائر الدينية والصلاة
ஈமானும், மனித வாழ்வில் அதன் தாக்கமும்  - الإيمان وأثره في حياة الإنسان
அரசியல் சட்ட ஒழுங்குபற்றிفي الفقه السياسي -
ஆட்சியும், அதிகாரமும்السياسة والحكم –
التفيسير التوحيدي
இது அவரது தப்ஸீர் நூல். ஸூரா அன்கபூத் வரை எழுதி முடித்துள்ளார் என தெரிகிறது.
மிகவும் அண்மையிலேயே ஹஸன் துராபியின் நூல்கள் எனக்குக் கிடைத்தன. இப்போதுதான் அவரைப் பற்றி வாசிக்க ஆரம்பித்துள்ளேன். எனவே அவரை ஆழ்ந்து ஆராய்ந்து சில நூல்களையும் எழுதிய அறிஞர் முக்தார் ஷன்கீதி ஊடாக அவர் பற்றியதொரு அறிமுகத்தை முன்வைப்பது பொருத்தம் எனக் கருதுகிறேன். நான் வாசித்த அளவிலும் சில கருத்துக்களையும் முன் வைக்கின்றேன்.
ஹஸன் துராபி தலைசிறந்த இஸ்லாமிய சிந்தனையாளர்களில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. அவர் முன்வைத்த  சிந்தனைகளில் தவறுகள் இருக்கலாம். மிகவும் சர்ச்சைக்குரிய விடயங்களும் இருக்கலாம். நாம் அவரது சிந்தனைகளை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவையில்லை. ஆனால் அவர் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய மிகப்பாரிய சிந்தனையாளர் என்பதில் சந்தேகமில்லை. பாரம்பரிய சிந்தனையில் பல அதிர்ச்சிகளை ஏற்படுத்தியவர் அவர். அதற்காக அவருக்கு காபிர், வழிகேட்டுப் பட்டத்தைக் கொடுத்து அவரை ஒதுக்குவது பொருத்தமல்ல.
மிகப் பாரிய சிந்தனைச் சவாலுக்கு இஸ்லாமிய சிந்தனை உட்பட்டிருக்கும் காலமிது. இஸ்லாம் ஓர் ஆட்சியாகவும் , தனித்துவமிக்க சமூகமாகவும் வாழ மிகக் கடும் சாவல்களை அது எதிர்கொள்கிறது. முழு உலகத்திற்கும் எதிராக ஆயுதம் தூக்குவதால் எமது சவால்களை நாம் வென்றுவிட முடியாது. சிந்தனையே சிந்தனையை வெல்லும். சிந்தனை மாற்றீடு மூலமே நாம் உலகில் வாழ முடியும்.
இந் நிலையில் முஹம்மத் அப்துஹூவிட மிருந்து துவங்கிய இந்த சிந்தனைப் போராட்டத்தின் அறிஞர்களை ஆழ்ந்து படிக்க வேண்டியுள்ளது. முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இஸ்லாமியத் தூதை  எத்திவைப்பதில் பெரும் பங்கு வகிக்கக் கூடிய சிறுபான்மை முஸ்லிம்களும் இந்த நவீன சிந்தனைச் பராம்பரியத்தைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.
இப்பின்னணியில்  துராபி எவ்வளவு வித்தியாசமான சிந்தனைகளை முன்வைத்திருந்தாலும் அவற்றை நாம் படிக்க வேண்டும், ஆராய வேண்டும். குப்ர், வழிகேடு என அதனை ஒதுக்கக் கூடாது.
ஹஸன் துராபி மேற்கு சிந்தனையையும், கிழக்கு சிந்தனையையும் இணைத்துக் கற்றவர். 20ம் நூற்றாண்டில் அவரின் தரத்திற்கு இவ்விரு சிந்தனைகளை ஆழ்ந்து படித்த இன்னொருவரைக் காண்பதரிது என முக்தார் ஷன் கீதி  அவரது சிந்தனைத் தரத்தை மதிப்பிடுகிறார்.
ஹஸன் துராபிக்கு இருபக்கமுள்ளது,
ஒரு புறத்தால் அவர் காலத்தையும் கடந்து நிற்கும்  புத்தாக்க சிந்தனையாளர். இரண்டாவது மிக சாணக்கியமிக்க அரசியற் போராளி.
மார்க்கத்தை மீள் ஒழுங்குபடுத்தல் (தஜ்தீதுத் தீன்) பகுதியிலும், அரசியல் ஆய்வுப் பகுதியிலும் அவரது பணி மிக ஆழமானது, மிகப் பாரியது.தொடர்ந்து நிலைத்து நின்று ஆய்வுக் குட்படுத்தக் கூடியது. எதிர்கால முஸ்லிம் சமூகத்திற்கு அவர் விட்டு செல்லும் மிகப் பெரும் சொத்து அதுவே.
தௌஹீத் – நடைமுறைப் பிரயோகம் – என்ற கருத்திலிருந்து அவரது சிந்தனை புறப்படுகிறது. தௌஹீதை – ஏகத்துவத்தை அவர் ஒரு தர்க்கப் பொருளாக பார்க்கவில்லை. அது மனிதனின் நடைமுறை முயற்சி, உழைப்பு என அவர் கண்டார். அது தொடர்ந்தேர்ச்சியான இறைவனை நோக்கிய புறப்பாடு என அவர் விளக்கினார். இஸ்லாத்தின் சம்பூரணத் தன்மையையே அவர் இங்கே இவ்வாறு முன்வைக்கிறார்.
தொழுகை பற்றி விளக்கும் போதும் அதன் நடைமுறைப் பிரயோகத்தையே விளக்கினார். மக்கள் ஒன்று கூடல், சமத்துவம், இமாமை தெரிவு செய்வதில் ஷூறாவின் பிரயோகம் என்பவற்றை அங்கே விளக்கினார்.
துராபி சில அடிப்படையான நடைமுறை ரீதியான சிந்தனைகளை முன்வைத்தார். அவற்றை விரிவாக விளக்க இங்கு முடியவில்லை. வெறும் கருத்துக்களை மட்டும் கீழே தருகிறோம்.
மார்க்கத்தையும், மார்க்கத்தைக் கடைப் பிடித்தலையும் வேறுபடுத்தி நோக்கல்.
இலட்சிய நிலையும், நடைமுறை யதார்த்தத்தையும் வேறுபடுத்திப் பார்த்தல்.
சோதனைகள் புதிய புதிய வடிவத்தைப் பெறல்
வரலாற்று இயக்கத்தின்  மீதேறிப் பிரயாணித்தல்.
கொள்கைளும், கோட்பாடுகளும் நிகழ்ச்சி நிரலாகல்.
வஹியையும், வரலாற்றையும் கலந்து குழப்பல் வரலாற்று இயக்கத்தோடு தொடர்ந்தோட முடியாது தடுக்கும்.
இக் கருத்துப் பின்னணியில் அவர் கூறினார்:
முன்னைய நல்லடியார்களது வரலாறு ஷரீஅத் அடிப்படைகளின் தொடராக இருந்தாலும், அந்த அடிப்படைகளையே மறைக்கும் அளவுக்கு அளவு மீறி அது பெருமைப் படுத்தப் படும் உணர்ச்சி பூர்வ நிலை தோன்றக் கூடாது. இதனைப் பிரயோகிக்கும் வகையில் துராபி சொன்ன சில கருத்துக்கள் கீழ்வருமாறு.
இறுதியில் ஈரானியர்கள் உமையாக்கள் தவிர இன்னும் பாரிய எதிரிகள் தமக்கு உள்ளனர் என்பதை உணர்ந்து கொள்வர்.
முஃதஸிலாக்கள், அஷ்அரீகள், முர்ஜிஆக்கள்,சூபிகள் என்பவர்களோடு போராடுவது தவிர இன்னும் பல சவால்கள் உள்ளன. என்பதை ஸலபீ ஸுன்னீப் பிரிவினர் உணர்ந்து கொள்வர்.
இஸ்லாமிய வரலாற்றின் சமன்பாடற்ற நிலையைக்கு அடிப்படைக் காரணம் கோட்பாட்டுக்கும், பிரயோகம், வழிமுறை என்பவற்றிக்குமிடையே சமன்பாடற்ற நிலை தோன்றியதாகும். முஸ்லிம் சமூகம், அதன் கட்டமைப்பு என்ற ஷரீஆ பகுதியில் பாரிய குறைபாடுகள் விடப்பட்டன. தொடர்ந்து துராபி இஸ்லாமிய இயக்கத்தை விமர்சிக்கையில் கீழ்வருமாறு கூறினார்:
கோட்பாட்டாய்வு பற்றிய பகுதி, பிரயோக வழிமுறை ஆய்வைவிட நன்கு வளர்ந்திருந்தது. அசத்தியத்தை ஒழிப்பதில் காட்டும் வேகம் சத்தியத்தை நிலை நாட்டுவதில் காணப்படவில்லை.
பிரபஞ்சத்தையே மாற்றுவோம் எனக் கதையாடுவார்கள். ஆனால் தமக்கு மிக அருகாமையில் உள்ள சிறிய உலகு பற்றிய எந்த அறிவும் அவர்களுக்கு இருக்காது. உணர்ச்சி வேகம் இருக்கும்; அறிவு நுணுக்கம் இருக்காது.
எல்லா இடங்களிலும் யுத்தங்களை மூட்டிவிட்டு பின்னர் அவற்றிலேயே நஷ்டமடைவர்.
குறைந்த சாதன வசதிகளே இருக்கும், தயாரிப்பில் பலவீனமிருக்கும் எனினும் உலகை முழுக்க தமக்கு எதிராகத் தூண்டி விட்டிருப்பர்.
இவ்வாறு ஹஸன் துராபி பல்வேறு சிந்தனைகளையும், கருத்துக்களையும் முன்வைத்தவர்.
அவை ஆழ்ந்தவை, நவீன உலகோடு உறவாடப் பொருத்தமானவை
அவற்றை ஆழ்ந்து படித்தலும் சமூக மட்டங்களில் பரப்புவதும் மிகப் பாரிய பலனை கொடுக்கும்.
http://www.usthazmansoor.com/

NOLIMIT உரிமையாளர் N.L.M. முபாறக்

Posted by Lanka Scholars on Monday, March 7, 2016 | 0 comments | Leave a comment...


நேர்­காணல்: இனோகா பெரேரா பண்­டார 
தமிழில்: ஒகொ­ட­பொல றினூஸா 


காத்­தான்­கு­டியில் இருந்து கொழும்பு சாஹிறாக் கல்­லூ­ரிக்கு வரும்­போது இவர் ஒரு சிறிய பையன். எனினும் காத்­தான்­கு­டியில் இருந்து முதன்­மு­றை­யாக சவூதி அரே­பி­யா­வுக்குச் செல்­கின்­ற­போது இவர் வலி­மை­மிக்க ஓர் இளைஞர்.
வர்த்­தக அறிவும், மாறு­பட்ட கோணத்தில் சிந்­திக்கும் இயல்பும் இவ­ருடன் கூடவே பிறந்த திறன்­க­ளாகும். பெஷன் தொடர்பில் எழுந்த ‘காய்ச்­சலால்’ முதிர்ச்­சி­ய­டைந்து சாதித்­த­வ­ரான N.L.M. முபாறக், ஒரு புது­மை­யான மனிதர். NOLIMIT மற்றும் Glitz தோன்­றி­யது இந்தப் புது­மை­யான மனி­த­ரி­டத்­தி­லி­ருந்தே. இந்த வடி­வ­மைப்­பா­ள­ரி­ட­மி­ருந்தே.
மிகவும் பரந்­த­ள­வி­லான வாடிக்­கை­யாளர் வலை­ய­மைப்­பொன்றைக் கொண்­டி­ருந்­த­போ­திலும்,  ஒரு­போதும் இவர் பொது மக்கள் முன்­னி­லையில் தோன்­றி­ய­தில்லை. முதன் முறை­யாக அந்தக் கொள்­கையைத் தகர்த்து இவர் உங்­களைச் சந்­திக்க வந்­துள்ளார்.  
நீங்கள் இந்த நாட்டில் பரந்த பெஷன் வலை­ய­மைப்பை உரு­வாக்­கிய வர்த்­தகர்?
வர்த்­தகர் என்று சொல்­வ­தை­விட தொழில் முயற்­சி­யாண்­மை­யாளர் என்று அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தையே நான் விரும்­பு­கின்றேன். ஏனெனில் வர்த்­தக நோக்­கங்­களைக் கடந்த மிகச் சிறந்த நோக்­கங்கள் NOLIMIT இற்­குள்ளும் என்­னுள்ளும் இருக்­கின்­றன. 
NOLIMIT என்­பது இன்று வளர்ந்து வரு­கின்ற வர்த்­த­கர்­க­ளுக்கு முன்­மா­தி­ரி­யான ஒன்­றாகும். அவர்­க­ளுக்கு முன்­மா­திரி ஒன்றை வழங்­கு­கின்ற தொழில் முயற்­சி­யாண்­மை­யா­ள­ரா­கவும் தொழி­ல­தி­ப­ரா­கவும் என்னை நான் காண்­கின்றேன். 

நீங்கள் எவ்­வாறு அப்­படிக் கூறு­வீர்கள்?
எனக்கு இருப்­பது பெஷன் குறித்த ‘காய்ச்சல்’. இது என்­னு­ட­னேயே ஒன்றிப் பிறந்­தது. இந்தக் காய்ச்சல் கார­ண­மாக நான் பெஷன் பற்றி நிறை­யவே சிந்­திக்­கின்றேன். வர்த்­தகக் கருத்­தேற்­புக்­களை (Business Concepts) உரு­வாக்­கு­கின்றேன். அதன் மூலம் தொழில்­வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்­து­கின்றேன். நான் இந்த நாட்டில் சில்­லறை வணிகத் துறையை (Retail Industry) மாற்­றி­ய­மைத்து அதற்குப் புதி­ய­தொரு வடி­வத்தைக் கொடுத்தேன். 
நீங்கள் இந்­நாட்டில் எந்­த­ளவு எண்­ணிக்­கை­யான தொழில்­வாய்ப்­புக்­களை உரு­வாக்­கி­யுள்­ளீர்கள்?
கடந்த 24 வருட காலத்­தினுள் நாம் இந்த நாட்டின் சில்­லறை வணிகத் துறையில் 10,000 இற்கும் அதி­க­மான தொழில்­வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்ளோம். சில­வேளை இத­னை­விட அதி­க­மா­கவும் இருக்­கலாம். பாட­சா­லையை விட்­டு­வி­ல­கிய இளை­ஞர்­களை உள்­வாங்கி, அவர்­க­ளுக்குச் சிறந்­த­தொரு பயிற்­சியை வழங்கி, அவர்­களின் நடை­யுடை பாவனை மற்றும் மனப்­பாங்கு என்­ப­வற்றில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்ளோம். 
அவ்­வாறு உரு­வா­கி­ய­வர்­களுள் பலர் இன்று நாட்­டிற்கு அந்­நியச் செலா­வ­ணியை ஈட்­டித்­த­ரு­கின்ற விதத்தில் சர்­வ­தேச ரீதியில் பணி­யாற்­று­கின்­றனர். NOLIMIT இல் பணி­யாற்­றி­ய­தாகச் சொன்­ன­வுடன் அவர்­க­ளுக்கு இன்று சர்­வ­தே­சத்தில் பாரிய வர­வேற்புக் கிடைக்­கின்­றது. 

உங்­க­ளது பெஷன் வலை­ய­மைப்பில் தொழில்­வாய்ப்­புக்கள் முஸ்லிம் இனத்­த­வர்­க­ளுக்கு மாத்­தி­ரமா?
இது சகல இனங்­க­ளையும் மதங்­க­ளையும் சேர்ந்­த­வர்கள் பணி­யாற்­று­கின்ற ஓரிடம். நூற்­றுக்கு, ஐம்­பது – ஐம்­பது வாய்ப்­புக்கள் அவர்­க­ளுக்கும் உள்­ளது. நான் தொழில்­வாய்ப்­புக்­களை வழங்­கு­வது இலங்­கை­யர்­க­ளுக்கு. எமது வாடிக்­கை­யா­ளர்­களுள் பல்­வே­று­பட்ட வர்க்­கத்தைச் சார்ந்­த­வர்­களும் உள்­ளனர். அதே­போன்­றுதான் எமது பணி­யாட்­தொ­கு­தி­யி­னரும். 
உங்­க­ளது வர்த்­த­கத்தின் நோக்கம் என்ன? 
எந்­த­வொரு வர்த்­த­க­ருக்கும் மேலி­ருந்து கீழ் வரை (top to bottom) குறிப்­பான கவ­னக்­கு­வி­வொன்று இருக்க வேண்டும். அத­னூடே வாடிக்­கை­யாளர் மகிழ்ச்­சி­ய­டைய வேண்டும். இறு­தியில் மக்கள் மகிழ்ச்­சி­ய­டைய வேண்டும். NOLIMIT இல் இருப்­பது முற்­றிலும் மகிழ்ச்­சியை அடிப்­ப­டை­யாகக் கொண்­ட­மைந்த இத்­த­கை­ய­தொரு குறிக்­கோளே. 
சில நிறு­வ­னங்­களில் வாடிக்­கை­யாளர் மீது கோபத்­துடன் இருப்­ப­தைப்போல் பெண் விற்­ப­னை­யாளர் (Sales Girl) பத­வி­யி­லுள்ள யுவ­திகள் இருக்­கின்­றனர். இது சில்­லறை வணிகத் துறையின் இயல்பா…
இல்லை. ஏதே­னு­மொன்றைக் கொள்­வ­னவு செய்­தாலும், செய்­யா­வி­டினும் வாடிக்­கை­யா­ள­ருக்கு மகிழ்ச்­சி­யுடன் உத­வு­வ­துதான் சில்­லறை வணிகத் துறையின் ஒழுக்க நெறி­யாகும். NOLIMIT பணி­யா­ளர்­களும் அவ்­வா­றுதான். எமது நிறு­வ­னத்தில் உயர்­மட்­டத்­தி­லி­ருந்து அடி­மட்டம் வரை­யான அனைத்துப் பணி­யாட்­தொ­கு­தி­யி­னரும் இத்­த­கைய மகிழ்ச்­சி­யுடன் வேலை செய்யும் உளக்­க­ருத்­துக்கு இயை­பாக்கம் அடைந்­த­வர்­க­ளே­யாவர். தனது உய­ர­தி­காரி இருந்­தாலும் சரி, இல்­லா­வி­டினும் சரி அவர்கள் இத­ய­சுத்­தி­யுடன் பணி­யாற்­றுவர். எமது முன்­னேற்­றமும் அதுதான். 
பணி­யா­ளர்­களின் மனப்­பாங்கில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தென்­பது இல­கு­வாக அமைந்­ததா?
வாழ்க்­கையின் பழக்­க­மாக அதனை மாற்­றிக்­கொண்டால் அது கடி­ன­மான ஒன்­றல்ல. வாடிக்­கை­யாளர் திருப்­தி­ய­டைந்தால் மாத்­தி­ரமே அவர்கள் மீண்டும் எம்­மிடம் வருவர். அவ்­விதம் அவர்கள் மீண்டும் மீண்டும் வந்­தால்தான் எமது நிறு­வனம் தொடர்ந்து இயங்கும். அவ்­வாறு தொடர்ந்து இயங்­கினால் மாத்­தி­ரமே தமது தொழில் நீடிக்கும் என்ற யதார்த்­தத்தைப் பணி­யா­ளர்கள் புரிந்து கொள்­வதே முக்­கி­ய­மாகும். 
சிறந்த மனப்­பாங்கை உரு­வாக்கி பயிற்­று­விக்­கப்­பட்ட பணி­யா­ளர்கள் உங்கள் நிறு­வ­னத்­தை­விட்டு வில­கு­வ­தற்கு நீங்கள் இட­ம­ளிக்­கின்­றீர்­களா?
எம்­மிடம் உள்­ள­வர்­களில் நூற்­றுக்கு இரு­பத்­தைந்து வீத­மானோர் 25 வய­திற்­குட்­பட்ட இளைஞர் யுவ­திகள். பத்துப் பதி­னைந்து வரு­டங்கள் தொடர்ச்­சி­யாக எம்­மி­டமே பணி­யாற்ற வேண்­டு­மென்ற எந்­த­வொரு நிபந்­த­னை­யையும் நாம் விதிப்­ப­தில்லை. ஒரு கதவு மூடப்­ப­டும்­போது இன்­னு­மொரு கதவு திறக்­கப்­ப­டு­கின்­றது. வில­கிச்­செல்­கின்ற அள­வுக்கு, நாம் புதி­ய­வர்­களை ஆட்­சேர்ப்புச் செய்து பயிற்­று­விக்­கின்றோம். அது எமக்குப் பிரச்­சி­னை­யல்ல. 
உங்­க­ளு­டைய முகா­மைத்­துவப் பாங்கு யாது?
அது ஏதேனும் செயற்­பா­டு­க­ளுக்கு அமை­வாக நிகழ்­கின்ற ஒன்று. மேலி­ருந்து கீழ் வரை சக­ல­ருக்கும் வழங்­கப்­ப­டு­கின்ற கட­மை­யொன்று உள்­ளது. அவ­ர­வ­ருக்­கென அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. அந்த அதி­கார வட்­டத்­தினுள் அவர்­க­ளுக்­கான சுதந்­தி­ரமும் உள்­ளது. சக­ல­வற்­றிலும் தலை­யி­டு­வதை விடுத்து குறித்த வட்­டத்­தினுள் தொழிற்­ப­டு­வதே எனது பாங்கு. 
உங்­க­ளுக்கும் பணி­யாட்­தொ­கு­தி­யி­ன­ருக்­கு­மி­டையே நில­வு­வது, கொடுக்கல் வாங்­கல்கள் மாத்­தி­ரமா அல்­லது அத­னையும் தாண்­டிய பிணைப்­பொன்றா? 
சிறந்த பணி­யாளர் ஒருவர் கிடைப்­ப­தென்­பது சிறந்­த­தொரு மனைவி கிடைப்­ப­தற்குச் சம­மா­ன­தாகும். பண்­பற்ற பணி­யாளர் ஒரு­வ­ருடன் வேலை செய்­வ­தா­னது கொடூ­ர­மான மனை­வி­யுடன் வாழ்­வ­தற்குச் சம­மா­ன­தாகும். நிறு­வ­னத்தின் முன்­னேற்­ற­மா­னது பணி­யாட்­தொ­கு­தி­யி­னரின் கைக­ளி­லேயே தங்­கி­யுள்­ளது. அதனால் அவர்­க­ளுடன் எனக்­குள்­ளது ஒரு பிணைப்­பே­யாகும். 
தீர்­மா­னங்­களை மேற்­கொள்­கின்ற போது நீங்கள் எவ்­வாறு சிந்­திக்­கின்­றீர்கள்?
அவை மிகத் துரி­த­மான தீர்­மா­னங்­க­ளாகும். இன்று பார்த்து நாளை பார்த்து. இன்னும் கொஞ்சம் பார்த்து எடுக்­கப்­ப­டு­பவை அல்ல. வர்த்­தக நட­வ­டிக்­கை­களில் அவ்­வாறு இழுத்­த­டித்­துக்­கொண்டு இருக்க முடி­யாது. 
நீங்கள் வாழ்க்கை குறித்து நிறைய திட்­ட­மி­டு­ப­வரா? 
இது­வரை திட்­டங்கள் ஏது­மின்­றியே நிறைய விட­யங்கள் நடந்­துள்­ளன. எனினும் இறை­வனின் திட்­டத்­திற்கு ஏற்­பவே அவை நிகழ்ந்­துள்­ளன. நல்ல விட­யங்­களைச் செய்தால் முன்­னோக்கிச் செல்­வ­தற்­கான பாதை­யொன்று உரு­வாகும். 
மனி­தனின் முன்­னேற்­றத்தில் பெரிதும் தாக்கம் செலுத்­து­கின்ற காரணி என்ன? 
 
முதலில் மற்­ற­வர்­களை முன்­னேற்­று­கின்ற முறை பற்றிச் சிந்­தி­யுங்கள். சகல தொழில்­வாண்­மை­யா­ளர்­களும் சாதிக்­க­வில்லை. சாதித்த அனை­வரும் தொழில்­வாண்­மை­யா­ளர்­களும் அல்லர். சிறந்த குறிக்­கோ­ளுடன் வேலை­செய்­வதே முக்­கி­ய­மா­ன­தாகும். அந்தக் குறிக்­கோ­ளினுள் மற்­ற­வர்­களை முன்­னேற்­றி­வி­டு­கின்ற செயற்­றிட்டம் ஒன்றும் இருக்க வேண்டும். அதே­போன்று வாழ்க்­கைக்கு எவ்­வித பெறு­மா­னத்­தையும் வழங்­காத நபர்­க­ளி­ட­மி­ருந்து வில­கி­யி­ருப்­பதும் முக்­கி­ய­மாகும். சிறந்த மனி­தர்­க­ளுடன் பழ­கு­வதும், வாழ்க்­கையில் நல்ல விட­யங்­களை இணைத்துக் கொள்­வதும் முக்­கி­ய­மா­ன­வை­யாகும். 

பெஷன் உல­கத்தில் நிலவும் போட்­டி­யா­னது உங்­க­ளுக்கு சவா­லான ஒன்றா? 
என்னைப் போன்றே ஏனை­ய­வர்­களும் வாழ வேண்டும். ஆனால் சம­மான வர்த்­தக நட­வ­டிக்கை ஒன்றில் மாற்­ற­மொன்றை, புது­மை­யொன்றை வழங்­கு­வ­தற்கு என்னால் முடி­யு­மாயின் அந்த இடத்­தில்தான் நான் வெற்­றி­யா­ள­னா­கின்றேன். நான் அத்­த­கைய போட்­டியை விரும்­பு­கின்றேன். ஏனெனில், அப்­போ­துதான் எனக்கு மென்­மேலும் புதிய விட­யங்கள் குறித்துச் சிந்­திப்­ப­தற்­கான சிறந்த தூண்­டுதல் ஏற்­படும். ஆடை­ய­ணி­க­லன்­களில் மட்­டு­மன்றி வீட்டு வாசல், சமை­ய­லறை, வர­வேற்­பறை, படுக்­கை­யறை என சகல இடங்­களும் எனக்கு பெஷன். வாழ்க்­கையை வடி­வ­மைக்­கின்ற, அதனை வர்­ண­ம­ய­மாக்­கு­கின்ற, எவ்­வ­ளவோ விட­யங்கள் இருக்­கின்­றன. 
நீங்கள் முத­லா­வ­தாகச் செய்த தொழில் என்ன?
பாட­சா­லையில் இருந்து வில­கி­ய­வு­ட­னேயே லங்கா ஒபரோய் ஹோட்­டலில் House Keeping  பிரிவில் தொழி­லொன்றை நானே தேடிக்­கொண்டேன். நான் அங்கு விறாந்­தையை சுத்­தப்­ப­டுத்­தினேன். அறை­களை ஒழுங்­கு­ப­டுத்தி அவற்றைப் பெருக்கிச் சுத்­தப்­ப­டுத்­தினேன். பக­லிலும் வேலை, இர­விலும் வேலை, எனது தொழிலை நான் மிகவும் மதித்தேன். இயன்­ற­வரை சிறப்­பாக வேலை செய்தேன். அது தொந்­த­ரவு என்றோ தாழ்­வா­ன­தென்றோ நான் ஒரு­போதும் நினைக்­க­வில்லை. சவூ­தியில் இருந்த பத்து வரு­டங்­க­ளிலும் அவ்­வா­றுதான்.
இன்று அந்த கடந்­த­காலம் ஞாப­கத்­திற்கு வரு­கின்­ற­போது என்ன நினைக்­கின்­றீர்கள்?
ஹோட்டல் அறையைப் பெருக்கிச் சுத்­தப்­ப­டுத்­திய ஒரு சிறிய பைய­னுக்கு இந்த நாட்டின் இளைஞர் யுவ­தி­க­ளுக்கு தொழில்­வாய்ப்­புக்­களை வழங்­கக்­கூ­டிய பாரிய கம்­ப­னி­யொன்றை உரு­வாக்க முடி­யு­மாயின், இன்­றைய சந்­த­தி­யி­ன­ருக்கு எவ்­வ­ளவு விட­யங்­களைச் சாதிக்க முடியும். சரி­யான பாதை­யொன்றைத் தேர்ந்­தெ­டுத்து, அதில் அர்ப்­ப­ணிப்­புடன் பய­ணிப்­பதே அவ­சி­ய­மாகும். தாய் தந்தை இல்­லை­யெனில் ஏனைய முதி­ய­வர்­க­ளா­வது அவ்­வா­றா­ன­வர்­க­ளுக்கு வழி­காட்­டுங்கள். அத­னையே நான் நினைக்­கின்றேன். 
பத்து வருட காலம் நீங்கள் சவூ­தியில் என்ன செய்­தீர்கள்? 
அது “camp operation…” நிறு­வ­ன­மொன்­றாகும். நான் சுத்­தி­க­ரிப்­பாளர் ஒரு­வ­ராகத் தொழிலை ஆரம்­பித்தேன். சம்­பளம் 950 ரூபா. எழு­து­வி­னைஞர், மேற்­பார்­வை­யாளர், முகா­மை­யாளர். என படிப்­ப­டி­யாக முன்­னேறி, செயற்­றிட்ட முகா­மை­யாளர் என்ற உயர் பதவி வரை சென்றேன். சகல வழி­ந­டத்தற் செயற்­பா­டு­களும் என்­னி­டமே ஒப்­ப­டைக்­கப்­பட்­டன. 1500 பணி­யாட் ­தொ­கு­தி­யி­னரை நிரு­வ­கித்தேன். நிரு­வாகம் மற்றும் இடர் முகா­மைத்­துவம் தொடர்­பான சிறந்த அனு­ப­வங்­களை நான் அந்தத் தொழி­லின்­போதே பெற்­றுக்­கொண்டேன். 
அத்­த­கைய சிறந்த தொழிலை விட்­டு­விட்டு நீங்கள் ஏன் இலங்­கைக்கு வந்­தீர்கள்? 
எனக்கே உரிய ஒன்றைச் செய்­வ­தற்கு. சில­வேளை எனக்­குள்­ளேயே தொந்­த­ரவு தரு­கின்ற பெஷன் பற்­றிய ஆர்­வத்தின் தூண்­டு­த­லா­கவும் அது இருக்­கலாம். நான் இலங்­கைக்கு வந்து எனது தந்தை முன்னர் தொழில் புரிந்த பது­ளையில் துணிக்­கடை ஒன்றை ஆரம்­பித்தேன். தந்­தைக்கு மட்­டக்­க­ளப்பில் துணிக்­கடை ஒன்று இருந்­த­மையால் எனக்கு இதனைச் செய்­வ­தற்குத் தோன்­றி­யது. எனினும் ஆறு வரு­டங்­களின் பின்னர் நான் அந்த வியா­பா­ரத்தை நிறுத்­தி­விட்டேன். 
உங்­க­ளுக்கு அதிஷ்­டத்தைக் கொண்­டு­வந்­தது தெஹி­வ­ளை NOLIMIT­காட்­சி­ய­றை­தானே?
‘‘French Corner' எனது முதல் காட்­சி­யறை. பது­ளையில் இருந்து வந்து எனது தங்கை, மைத்­துனர் ஆகி­யோ­ருடன் இணைந்து அந்தப் பெயரில் புதி­ய­தொரு வியா­பா­ரத்தை ஆரம்­பித்தேன். ஆண் - பெண் - சிறுவர் என சக­ல­ருக்கும் ஏதா­வ­தொரு பெஷன் வகை­ய­றாக்கள் அதில் இருந்­தன. 1992 இல் இருந்து 2005 வரை வியா­பா­ர­மா­னது முன்­னேற்­ற­க­ர­மா­ன­தாக இருந்­தது. அக்­கா­லப்­ப­கு­தியில் சில்­லறை வணிகத் துறையில் பெஷன் மூலம் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யது நாமே. 
அப்­ப­டி­யாயின் French Corner - NOLIMIT ஆனது எவ்­வாறு?
தங்­கையும் மைத்­து­னரும் வியா­பா­ரத்தை என்­னிடம் ஒப்­ப­டைத்து அவர்­க­ளுக்­கு­ரிய பணத்தைப் பெற்­றுக்­கொண்டு விலகிச் சென்­றனர். நான் புதி­தாக ஆரம்­பிப்­ப­தற்­கான பெயர் குறித்துச் சிந்­தித்தேன். ‘எல்­லை­யற்­றது…’ என்ற அர்த்­தத்தைக் கொண்­டதும் எனது பெயரின் முத­லெ­ழுத்­துக்­களைக் கொண்­ட­து­மான  NOLIMIT என்ற பெயரைச் சூட்­டினேன். 
NOLIMIT  என்­ப­தனுள் உங்­க­ளு­டைய பெயர் எங்­குள்­ளது?
NLM  என்ற சிவப்பு நிறத்­தி­லான மூன்று எழுத்­துக்கள் குறிப்­பது ‘நூஹ் லெப்பை முஹம்மட்’ என்ற எனது தந்­தையின் குடும்பப் பெயர். எனக்கு எப்­பொ­ழுதும் பெயர் உரு­வாக்­கு­கின்­ற­போது பெஷனுக்­க­மைய சிந்­திக்­கின்ற ஒரு பழக்கம் உள்­ளது. கஷ்டப்­பட்டு உரு­வாக்­கிய பெயரைப் போலவே, ஒவ்வோர் ஆண்டும் நான் புதி­தான ஓரி­டத்தை உரு­வாக்­கினேன். எவ்­வா­றெனில், முன்னாள் ஜனா­தி­பதி பிரே­ம­தாஸ “கம் உதா­வ”யை உரு­வாக்­கி­யதைப் போன்று. 
அதி­க­ள­வான காட்­சி­ய­றை­களைக் கொண்ட வலை­ய­மைப்­பொன்றை உரு­வாக்கும் கனவு உங்­க­ளுக்கு உண்டா?
சனத்­தொகை மற்றும் கேள்வி என்­ப­வற்­றுக்­க­மை­யவே நாம் காட்­சி­ய­றை­களைத் திறக்­கின்றோம். கடன் பெற்று புதிய வியா­பா­ரத்தைத் தொடங்­கு­கின்ற பழக்கம் என்­னிடம் இல்லை. பணம் இருந்தால் மாத்­தி­ரமே புதிய காட்­சி­ய­றை­களைத் திறப்போம்.
இந்த நாட்டில் ‘செல்­வந்த வர்த்­த­கர்­க­ளுக்குக் கைகொ­டுக்­க­வென’ வேண்­டி­ய­ளவு வங்­கிகள் உள்­ள­னவே?
நான் எவ­ரி­டமும் கடன்­கேட்டுச் செல்­வ­தில்லை. ஒதுக்­கீடு கேட்­கின்ற அர­சி­யல்­வா­தி­களின் பின்னால் செல்­வ­து­மில்லை. அவைதான் எனது வாழ்க்­கையின் பெறு­மா­னங்கள். 
இந்த வியா­பா­ரத்தை எவ்­வ­ளவு மூல­த­னத்­துடன் ஆரம்­பித்­தீர்கள்? 
பது­ளையில் ஆரம்­பித்­தது இரண்­டரை இலட்­சங்­க­ளுடன். தெஹி­வளை French Corner ஆரம்­பித்­தது பத்து இலட்­சங்­க­ளுடன். அப்­போது சகல வகை­ய­றாக்­களும் கொஞ்சம் கொஞ்சம் இருந்­தன. விற்­ப­னைக்­கேற்­பவே நான் கொள்­முதல் செய்தேன். 
ஆரம்­ப­கா­லத்தில் நாளொன்­றுக்கு எத்­தனை மணித்­தி­யா­லங்கள் வேலை செய்­தீர்கள்?
சில நாட்­களில் 12 – 14 மணித்­தி­யா­லங்கள் வேலை செய்தேன். கொள்­முதல் செய்­ததும் நான்தான். விற்­பனை செய்­ததும் நான்தான். கணக்கு வழக்­கு­களைப் பார்த்­ததும் நானே. மொத்­தத்தில் சகல வேலை­க­ளையும் நானே செய்தேன். 
வாழ்க்­கையில் பெற்ற மிகப் பெரிய வெற்றி எது?
சிறந்த பிள்­ளைகள் ஐவரைப் பெற்­றமை. மூத்த மகன் ஹாபிஸ். அவர் இந்த வர்த்­த­கத்தின் பணிப்­பா­ளர்­களுள் ஒருவர். இரண்­டா­வது மகன் தீதாத். அவரும் பணிப்­பா­ளர்­களுள் ஒருவர். இவர்கள் இரு­வரும் சிறப்­பாகப் பணி­யாற்­று­கின்­றனர். மூன்­றா­வதும் நான்­கா­வதுமான புதல்­வர்கள் மற்றும் இளைய மகள் ஆகியோர் உயர் கல்­வியைத் தொடர்­கின்­றனர். எனது பிள்­ளைகள் அனை­வரும் சிறந்த முறையில் வளர்க்­கப்­பட்­டுள்­ளனர். உண்­மையில் நான் வியா­பார விட­யங்­களில் பெரும்­பா­லான காலத்தைச் செல­விட்ட போது, எனது மனைவி மக்­கியா, பிள்­ளை­களைச் சிறப்­பாக வளர்த்­தெ­டுத்தார். அவர் சிறந்­த­தொரு தாய் மட்­டு­மல்ல, சிறந்த முறையில் ஊக்­கு­விக்­கக்­கூ­டிய மனை­வி­யும்தான். 
அப்­ப­டி­யெனில் NOLIMIT குடும்ப வர்த்­தகம் ஒன்று?
ஆம். நான், மனைவி மற்றும் பிள்­ளைகள் என்­போரைக் கொண்ட குடும்ப வணிகம். அவர்கள் வணிகம் பற்றி சிறந்த முறையில் சிந்­திக்­கின்­றனர். 
வாழ்க்­கையில் பெற்ற தோல்­விகள் எவை? 
பது­ளையில் இருந்த போது நான் விருந்­தகம் ஒன்று நடத்­தினேன். அதில் நட்டம் ஏற்­பட்டு அதனை மூடி­விட்டேன். அதன் பிறகு ஏஜென்சி ஒன்று தொடங்கி அதுவும் வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. சரி­வ­ராது என எனக்கு விளங்­கினால் அந்த வியா­பா­ரத்தை நான் கைவிட்டு விடுவேன். அதனை நான் தோல்­வி­யாக நினைப்­ப­தில்லை. அதி­லி­ருந்து விடு­ப­டு­வது அதனை விட நிம்­ம­தி­யா­ன­தாகும். 
நீங்கள் சவால்­களை எதிர்­கொள்ள விரும்பும் ஒரு­வரா? 
அனேகமானோர் வேண்­டா­மென்று கூறி­ய­போதும் கல்­கிஸ்­ஸ­யி­லுள்ள மயா­னத்­திற்கு எதிரே நான் பெரி­ய­தொரு Glitz காட்­சி­ய­றையைத் திறந்தேன். மயானம் பாழ­டைந்­துள்­ளது என்­ப­தற்­காக எனது வியா­பா­ரமும் பாழ­டைந்­ததா? இல்லை. அத்­த­கைய போலி­யான நம்­பிக்­கைகள் என்­னி­ட­மில்லை. கவர்ச்­சி­க­ர­மாக முன்­வைக்க முடி­யு­மாயின் மயா­னத்­திற்­குள்ளே காட்­சி­ய­றையைத் திறந்­தாலும் வாடிக்­கை­யா­ளர்கள் நாடி வருவர். 
உங்­க­ளு­டைய பிர­தேசம் கொழும்பா?
 
இல்லை, காத்­தான்­குடி. பன்­னி­ரண்டு வய­து­வரை நான் அங்­கேயே கல்­வி­கற்றேன். அதன் பின்னர் சாதா­ர­ண­தரம் வரை கொழும்பு சாஹிறாக் கல்­லூ­ரியில் கற்றேன். பாட­சாலை விடு­தியில் தங்­கி­யி­ருந்தேன். விடு­முறை காலங்­க­ளில்தான் வீட்­டுக்குச் சென்றேன். 

காத்­தான்­கு­டியில் இருந்து கொழும்­புக்கு வந்து தனி­யாக சக­ல­தையும் தாங்­கிக்­கொள்ளும் பிள்­ளை­யாக இருப்­ப­தற்கு உங்­களால் முடிந்­ததா? 
எந்­த­வொரு நிலை­யிலும் மகிழ்ச்­சி­யாக வாழ்­வ­தற்கு எனக்குக் கற்­றுக்­கொ­டுத்­தவர் எனது தாய். சிறு வய­திலும் நான் மன­வு­றுதி மிக்க ஒரு பிள்ளை. தாய், தந்­தை­யி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொண்ட சிறந்த குண­ந­லன்­களும் அந்த மன­வு­று­திக்கு மெரு­கூட்­டின. மனி­தர்­களை மதிப்­ப­தற்கு, தவறின் போது மன்­னிப்­ப­தற்கு, நேர்­மை­யாக வாழ்­வ­தற்கு, அடுத்­த­வர்­களைத் தொந்­த­ரவு செய்­யா­தி­ருப்­ப­தற்கு, தீய­வர்­க­ளி­ட­மி­ருந்து வில­கி­யி­ருப்­ப­தற்கு, நல்­ல­வர்­க­ளுடன் உற­வா­டு­வ­தற்கு, வீட்­டுக்குச் சென்ற எல்லா நேரங்­க­ளிலும் தாயும், தந்­தையும் எனக்குச் சொல்­லிக்­கொ­டுத்­தனர். அடிக்­கடி நினை­வூட்­டினர். 
சிக்­க­ன­மாக வாழ்­வ­தற்கு அந்தப் பிள்ளைப் பரு­வத்தில் உங்­க­ளுக்குப் பழக்கம் இருந்­ததா? 
தந்­தைக்கு மட்­டக்­க­ளப்பில் துணிக்­கடை ஒன்று இருந்­தது. மீண்டும் செல்­கின்ற போது எனது செல­வு­க­ளுக்குப் போதி­ய­ளவு பணம் கிடைத்­தது. அதனால் சொல்­லு­ம­ள­வுக்கு பணப் பற்­றாக்­குறை இருக்­க­வில்லை. குடும்­பத்தில் பிள்­ளைகள் எட்டுப் பேர். அவர்கள் அனை­வ­ரையும் விடு­தியில் தங்­க­வைத்தே தந்தை கற்­பித்­தி­ருந்தார். 
பிள்ளை என்ற வகையில் உங்­க­ளுக்கு இருந்த கனவு - குறிக்கோள் என்ன?
அவ்­வாறு பெரி­ய­ள­வி­லான கன­வுகள் எவையும் இருக்­க­வில்லை. ஆனால், வீட்டில் இருந்­த­போதும் விடு­மு­றைக்குச் சென்று வரு­கின்­ற­போதும் நான் எப்­பொ­ழுதும் தந்­தை­யிடம் கேட்­டது ‘எனக்குக் கொண்­டு­வந்த புதிய விட­யங்கள்’ எவை என்றே. அந்தக் காலத்­திலும் நான் அழ­காக ஆடை­ய­ணிந்தேன். புதிய விட­யங்கள் பற்றி அதிக ஆர்­வமும் ஆசையும் இருந்­தது. அதனால் குறைந்­தது புதிய கைக்­க­டி­காரம் - செருப்பு போன்­ற­வை­சரி எனக்குக் கிடைத்­தன. 
ஏதேனும் சுட்­டித்­தனம் புரிந்து அடி­வாங்­கிய அனு­பவம் உண்டா?
 
நான் றகர் விளை­யா­டினேன். கிரிக்கட் விளை­யா­டினேன். மெய்­வல்­லுனர் விளை­யாட்­டுக்­களில் ஈடு­பட்டேன். நான் றகர் விளை­யா­டிய அந்த வரு­டத்­தில்தான் சாஹிறாக் கல்­லூரி முதன்­மு­றை­யாக புனித தோமஸ் கல்­லூ­ரியைத் தோற்­க­டித்து வெற்­றி­யீட்­டி­யது. சிறந்த விளை­யாட்டு வீர­ரி­டத்தில் இருக்க வேண்­டிய ஒழுக்க விழு­மி­யங்கள் என்­னி­டத்தில் இருந்­தன. அதனால் சண்டை சச்­ச­ர­வு­க­ளுக்கு நான் போன­து­மில்லை. அடி­வாங்­கி­ய­து­மில்லை. 

சாதா­ர­ண­தரப் பரீட்­சை­யா­னது உங்­க­ளது வாழ்க்­கை­யையும் எதிர்­கா­லத்­தையும் தீர்­மா­னித்­தது எனக் கூறினால்?
 
நான் பரீட்­சையில் சிறப்­பாகச் சித்­தி­ய­டை­ய­வில்லை. சிறந்த தொழில்கள் எனக்குக் கிடைக்­கா­தென்­பதை நான் புரிந்­து­கொண்டேன். நான் முடி­வெ­டுத்தேன். ஹோட்டல் தொழி­லுக்குச் சென்றேன். இல்­லா­மற்­போன ஒன்­றுக்­காகக் கவ­லைப்­ப­ட­வேண்­டிய தேவை எனக்­கில்லை. இருக்­கின்ற இடத்­தி­லி­ருந்து ஆரம்­பிக்­கின்ற முறைதான் எனக்கு முக்­கியம். 

உங்­க­ளு­டைய முயற்­சி­மிக்க வாழ்க்­கையை முன்­மா­தி­ரி­யாகக் கொண்டு தொலை­தூ­ரத்­தி­லுள்ள கிரா­மத்தின் இளைஞர் யுவ­திகள் இந்த நேர்­கா­ணலின் பின்னர் NOLIMIT மூலம் வாழ்க்­கையை ஆரம்­பிக்க எண்­ணினால் உதவி செய்­வீர்­களா? 
ஒவ்­வொரு மாதமும் நாம் ஆட்­சேர்ப்புச் செய்­கின்றோம். தூரப் பிர­தே­சங்­களில் இருந்து வரு­கின்­ற­வர்­க­ளுக்குப் பாது­காப்­பான தங்­கு­மி­டங்­க­ளையும் உண­வு­க­ளையும் வழங்­கு­கின்றோம். கொழும்­புக்கு வந்­தாலும் தவ­றான வாழ்க்­கை­யொன்­றினுள் விழாமல் இருப்­ப­தற்­கா­கவே நாம் அவ்­வா­றான பாது­காப்பை வழங்­கு­கின்றோம். மூன்று வரு­டங்­க­ளுக்கு ஒரு முறை பத­வி­யு­யர்­வு­களைப் பெற்று வாழ்க்­கையை வெற்­றி­கொள்­வ­தற்­கான சிறந்த வழி­யொன்று அவர்­க­ளுக்கு உள்­ளது. அதற்கு  உற்­சாகம், அர்ப்­ப­ணிப்பு மற்றும் முயற்சி என்­பவை மாத்­தி­ரமே அவர்­க­ளுக்குத் தேவை. 
நீங்கள் வாழ்க்­கையை வாழ்­வது எவ்­வாறு?
மனிதன் என்ற அடிப்­ப­டையில் நான் சிறப்­புடன் வாழ்­கின்றேன். உலகம் பூரா­கவும் செல்­கின்றேன். வைத்­தி­ய­சா­லை­களில் நலன்­புரிச் செயற்­பா­டுகள், தலதா பெர­ஹர அனு­ச­ரணை, சிறுவர் மேம்­பாட்டுச் செயற்­பா­டுகள் போன்ற சகல சம­யத்­த­வர்­களும் இனத்­த­வர்­களும் மகிழ்ச்­சி­ய­டை­கின்ற வகையில் ஒரு நிறு­வனம் என்ற வகையில் எமது செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கின்றோம். அது எனக்கும் மகிழ்ச்­சி­ய­ளிக்­கின்­றது. 
உங்­க­ளுக்கு இயற்­கையை இர­சிப்­ப­தற்கு நேரம் இருக்­கின்­றதா?
 
எனக்கு சீது­வையில் பண்ணை ஒன்று உள்­ளது. அங்கு நான் நீண்ட செவி­க­ளை­யு­டைய ஆடு­க­ளையும் ‘அரொ­வானா’  (Arowanas) வகையைச் சேர்ந்த மீன்­க­ளையும் வளர்க்­கின்றேன். நான் உயி­ரி­னங்­களை நேசிப்­பவன். அவற்றைப் போஷித்து அவை வளர்­கின்ற விதத்தைப் பார்த்து ரசித்து சந்­தோஷம­டை­கின்றேன். நேரம் கிடைக்­கும்­போ­தெல்லாம் நான் அங்கு செல்வேன். பெஷனை நேசிப்­பது போலவே  செடி­கொ­டி­க­ளையும், உயி­ரி­னங்­க­ளையும் நான் நேசிக்­கின்றேன். 

ஆடை­யொன்றை விற்­ற­வுடன் நீங்கள் மகிழ்ச்­சி­ய­டை­வது அதன் இலா­பத்தை நினைத்தா?
 
இல்லை. எனது காட்­சி­ய­றையின் ஆடை­களை இந்த நாட்­டி­லுள்ள அனை­வரும் அணி­வதைப் பார்க்­கவே நான் விரும்­பு­கின்றேன். வெளி­நா­டொன்றில் ஒருவர் எனது காட்­சி­யறை ஆடையை அணிந்து செல்­வதை நான் கண்டேன். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்­சியைக் கொடுத்­தது.
 
புதிய யோச­னைகள் (Ideas) பற்­றிய எண்­ணங்கள் உங்­களை வதைக்­கின்­றதா?

நான் அடிக்­கடி புதி­ய­வற்றைத் தேடு­கின்றேன். பார்க்­கின்றேன். சிந்­திக்­கின்றேன். தரு­விக்­கின்றேன். என்­னைப்­போ­ல­வேதான் எனது குழு­வி­னரும். அவர்­க­ளது புதிய எண்­ணங்­களும் கருத்­துக்­களும் இந்த நிறு­வ­னத்­தினுள் செயல் வடிவம் பெறு­கின்­றன.  
முழு நாட்­டிற்கும் பெஷனை வழங்­கிய நீங்கள், பெஷனாக இல்­லையே? 
நான் போதி­ய­ளவு பெஷனாக இருந்த ஒருவன். அவ்­வாறு உடுத்­திய பெறு­ம­தி­மிக்க கழுத்­துப்­பட்டி, மேலங்கி, - சேர்ட் ,- காற்­சட்டை – சப்­பாத்து என்­பன வேண்­டி­ய­ள­வுக்கு இருந்­தன. கடந்த நாட்­களில் சுமார் 5000 அள­வி­லான எனது பெஷன் புகைப்­ப­டங்­களை நான் அழித்­து­விட்டேன். எட்டு வரு­டங்­க­ளாக நான் அணி­வது எனது இந்த எளி­மை­யான உடை­யையே. இந்த ஆடையில் அதி­க­ள­வான ஒழுக்கம் இருக்­கின்­றது. நான் தற்­பொ­ழுது விழாக்­களில் கலந்து கொள்­வதும் இந்த ஆடை­யு­டன்தான். இதுதான் எனது அடை­யாளம். 
இல­கு­வா­ன­தெனக் கரு­தியா இந்த ஆடைக்கு மாறி­னீர்கள்?
 
இப்­போதும் நான் நினைத்த மாத்­தி­ரத்தில் பேரூந்தில் செல்­கின்றேன். நினைத்த மாத்­தி­ரத்தில் முச்­சக்­கர வண்­டி­யிலும் செல்­கின்றேன். எவரும் என்னை அடை­யாளம் காண்­ப­தில்லை. அது எனக்கு மிகவும் சௌக­ரி­ய­மாக உள்­ளது. 

உங்­க­ளது வாழ்க்­கையில் தாங்க முடி­யாத கஷ்டம் ஏற்­பட்ட காலப்­ப­குதி நினை­வுள்­ளதா?
 
இறைவன் எமக்குக் கஷ்டங்­களைத் தரு­வது எம்மைச் சோதித்துப் பார்ப்­ப­தற்­கா­கவே. நாம் அவற்­றுக்கு முகங்­கொ­டுக்க வேண்டும். எனது பாணந்­துறைக் காட்­சி­யறை எரிந்து சாம்­ப­லா­னது. சுமார் 300 மில்­லியன் இழப்பு ஏற்­பட்­டது. நான் கவ­லைப்­ப­டு­வதால் பய­னுள்­ளதா? இறைவன் கொடுத்தான். அவனே எடுத்­துக்­கொண்டான். ஆடை­யின்றி இந்த உல­கத்­திற்கு வந்த நான் நிறை­யவே சம்­பா­தித்தேன். சில நேரங்­களில் அவற்றில் கொஞ்சம் குறைந்­தது. அதனால், ஐயோ! எனக்குப் பிரச்­சினை அதிகம் என கவ­லைப்­ப­டு­வது எதற்கு? அதுதான் வாழ்க்­கையின் நியதி. எந்­த­வொரு கஷ்டகா­லத்­திலும் நடு­நி­லை­யாக இருப்­ப­துதான் முக்­கியம்.
 
NOLIMIT மற்றும் Glitz என்­பன இந்த நாட்டில் இன்னும் எத்­தனை வரு­டங்­க­ளுக்கு இருக்க வேண்டும் என நீங்கள் நினைக்­கின்­றீர்கள்? 

அதனைத் தீர்­மா­னிப்­பது வாடிக்­கை­யா­ளர்­களே. நாம் அவர்­க­ளுக்கு பெஷன் பற்றி வழங்­கு­கின்ற ஒரு முற்­ப­கர்வு, வர­வேற்பு, பணத்­திற்­கான பெறு­மானம் மற்றும் கவ­னக்­கு­விவு ஆகியன தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பவர்கள் வாடிக்கையாளர்களே. எனது பணி கவனக்குவிவைச் (focus) செலுத்துவதே. எனக்கு முதலாவதும், இரண்டாவதும், மூன்றாவதும் முக்கியமானது கவனக்குவிவுதான். 
தந்தையிடமிருந்து புதல்வர்களுக்குச் செல்கின்ற வர்த்தகத்தினுள் அத்தகைய சிறந்த குணநலன்கள் அனைத்தும் பாதுகாக்கப்படுமா?
 
அதற்காக சரியான நபர்களை, சரியான முறையில் பழக்கப்படுத்திப் பயிற்றுவிப்பது எனது கடமை. Boss என்று ஒருபுறமாக ஒதுங்கியிருக்க என்னால் முடியாது. சிறந்த மனப்பாங்குகளுடன் முன்னோக்கி வருகின்ற அடுத்த சந்ததியொன்று எனக்குத் தென்படுகின்றது என்பதைச் சொல்வதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. 

நீங்கள் சமயத்தைச் சிறப்பாகப் பின்பற்றி வாழ்பவரா?
 
ஆம். அவ்வாறு இல்லையெனில் மறுவுலகில் நான் இறைவன் முன்னிலையில் பதில் சொல்ல வேண்டி ஏற்படும். அதனால் வியாபாரம் செய்கின்ற போதும் நாம் பின்பற்ற வேண்டிய சட்டதிட்டங்கள் இருக்கின்றன. நாம் சம்பாதிக்கின்ற சொத்துக்களில் இருந்து நூற்றுக்கு இரண்டரை வீதம் இந்த சமூகத்திற்கு வழங்க வேண்டும். அவ்வாறு செய்வதனால்தான் எமக்கு மீண்டும் அவை கிடைக்கின்றன. 

மீண்டும் பெஷனாக ஆடை அணி வதற்கு நினைத்துப் பார்ப்பதில் லையா? 
ஒவ்வொரு நாடுகளினதும் ஷொப்பிங் மோல்களுக்குச் சென்று ஆடைகளைத் தொட்டுப் பார்க்க இன்னும் எனக்கு ஆசைதான். ஆனாலும், அவ்வாறு அழகாக அணிந்து இரசித்த வாழ்க்கைக்கு நான் விடை கொடுத்துவிட்டேன். 
தற்போது உங்களுடைய வயது என்ன?
62. உடல் முதுமையடைந்தாலும் பெஷன் பற்றிய எனது எண்ணங்கள் முதுமை யடையவில்லை. அதனால் வயது எனக்கொரு பிரச்சினையல்ல. மென்மேலும் வேலை செய்யவே நான் விரும்புகின்றேன். 
உங்களுக்குள் இருந்த விளையாட்டு வீரன் எங்கே?
சகல விளையாட்டுக்களிலும் ஈடுபட்ட போதிலும் நீச்சலில் ஈடுபட முடியாமற் போய்விட்டது. நான் தற்போதுதான் நீச்சல் கற்றுக்கொண்டிருக்கின்றேன். 62 வயதல்ல, இன்னும் முதுமையடைந்தாலும் ஏதாவதொன்றைக் கற்றுக்கொள்வதற்கே நான் விரும்புகின்றேன். அதாவது என்னுள் அந்த விளையாட்டு வீரன் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கின்றான். 
சொல்லுமளவுக்கு உயரமோ பருமனோ இல்லாத ஒருவர். என்றாலும் நீங்கள் உன்னதமான ஒரு பாத்திரம். முதன் முறையாகத்தானே ஊடகம் ஒன்றில் தோன்றியுள்ளீர்கள்?
ஆம். இந்த 25 வருட காலத்திற்கும் எனது புகைப்படம் ஒன்றேனும் பத்திரிகையில் பிரசுர மாகியிருக்கவில்லை. அவ்விதம் பிரசுரமாவது நான் விரும்பாத ஒன்று. எனினும் நீங்களும் விடவில்லையே. அதனால் முதன் முறையாக நான் எனது வாழ்க்கை பற்றி ஊடகமொன்றில் கதைத்திருக்கின்றேன். அதிலிருந்து யாரேனும் ஏதேனுமொன்றைப் பெற்றுக்கொள்ள முடியு மாக இருந்தால் அதுவே போதுமானது.  
நன்றி: சிலுமின 

Popular Posts